பெரியார் சிலையை உடைத்த வழக்கில் போலீஸ்காரர் கைது


பெரியார் சிலையை உடைத்த வழக்கில் போலீஸ்காரர் கைது
x
தினத்தந்தி 21 March 2018 4:30 AM IST (Updated: 21 March 2018 1:14 AM IST)
t-max-icont-min-icon

ஆலங்குடி அருகே பெரியார் சிலையை உடைத்த வழக்கில் போலீஸ்காரர் கைது செய்யப்பட்டார்.

ஆலங்குடி,

ஆலங்குடி அருகே பெரியார் சிலை உடைப்பு தொடர்பாக ஒரு வாலிபரை ஆலங்குடி போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில், அவர் புதுக்கோட்டை விடுதியை சேர்ந்த ஓய்வு பெற்ற சிறைக்காவலர் சரவணமுத்து மகன் செந்தில்(வயது 35) என்பது தெரியவந்தது. செந்தில், மத்திய ரிசர்வ் போலீசில் போலீஸ்காரராக சத்தீஷ்கார் மாநிலத்தில் பணியாற்றி வருகிறார். கடந்த 3 நாட்களுக்கு முன்பு விடுமுறையில் அவர் ஊருக்கு வந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு மது அருந்திவிட்டு பெரியார் சிலையை அவர் உடைத்தது, விசாரணையில் தெரியவந்தது.

இதைத்தொடர்ந்து செந்திலை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவரை ஆலங்குடி குற்றவியல் நீதிமன்றத்தில் நீதிபதி கலைநிலா முன்னிலையில் ஆஜர்படுத்தினர்.

செந்திலை 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து செந்திலை, போலீசார் பாதுகாப்புடன் அழைத்து சென்று புதுக்கோட்டை சிறையில் அடைத்தனர். 

Next Story