காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி த.மா.கா.வினர் ஆர்ப்பாட்டம்
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி மன்னார்குடியில் த.மா.கா. சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மன்னார்குடி,
காவிரி மேலாண்மை வாரியத்தை உடனடியாக அமைக்க வேண்டும். பெட்ரோல்-டீசல் விலையை ஜி.எஸ்.டி. வரம்புக்குள் கொண்டு வர வேண்டும். டெல்டா மாவட்டத்தை பாதுகாக்கப்பட்ட வேளாண்மை மண்டலமாக அறிவிக்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி மன்னார்குடி பெரியார் சிலை அருகில் த.மா.கா. மாவட்ட இளைஞர் அணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு த.மா.கா. மாவட்ட தலைவர் குடவாசல் தினகரன் தலைமை தாங்கினார். இளைஞர் அணி தலைவர் சங்கர், மாநில பொதுக்குழு உறுப்பினர் சிங்குபாண்டியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில கொள்கை பரப்பு செயலாளர் கரிகாலன், மன்னார்குடி வட்டார தலைவர் முனியப்பன், முன்னாள் நகரசபை தலைவர் ராஜேந்திரன், நீடாமங்கலம் தலைவர் சந்திரசேகரன், மாவட்ட பொதுச்செயலாளர் சிவசுப்பிரமணியன் உள்பட பலர் கலந்து கொண்ட னர்.
முடிவில் வட்டார இளைஞர் அணி தலைவர் சஞ்ஜெய் நன்றி கூறினார்.

Related Tags :
Next Story