கூட்டுறவு சங்க தேர்தலை முறையாக நடத்த அலுவலர்கள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்
தர்மபுரி மாவட்டத்தில் கூட்டுறவு சங்க தேர்தலை முறையாக நடத்த அலுவலர்கள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்று கலந்தாய்வு கூட்டத்தில் தேர்தல் ஆணையர் ராஜேந்திரன் அறிவுறுத்தினார்.
தர்மபுரி,
தமிழ்நாடு மாநில கூட்டுறவு சங்கங்களின் தேர்தல் ஆணையம் சார்பில் தேர்தல் அலுவலர்களுக்கான கலந்தாய்வு கூட்டம் தர்மபுரி கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு கூட்டுறவு சங்கங்களின் தேர்தல் ஆணையர் ராஜேந்திரன் தலைமை தாங்கினார். கலெக்டர் மலர்விழி முன்னிலை வகித்தார். கூட்டத்தில் கூட்டுறவு சங்கங்களின் தேர்தல் ஆணையர் ராஜேந்திரன் பேசியதாவது:-
தர்மபுரி மாவட்டத்தில் 11 வகையான கூட்டுறவு சங்கங்களை சேர்ந்த 483 சங்கங்களுக்கு தேர்தல் நடைபெறுகிறது. இதில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்யும் போது வேட்பாளருடன் 5 நபர்கள் மட்டும் அனுமதிக்கப்படுவார்கள். தவணை தவறிய கடன்தாரர்கள் இந்த தேர்தலில் போட்டியிடுவதற்கும், வாக்களிப்பதற்கும் உரிமை இல்லை. ஒரு ஆண்டு சிறை தண்டனை பெற்றவர்கள் 5 ஆண்டுகள் தேர்தலில்போட்டியிட முடியாது. தற்போது கூட்டுறவு அமைப்புகளில் உள்ள தலைவர்களின் அலுவலகங்கள் உடனடியாக பூட்டப்பட வேண்டும். அவர்கள் பயன்படுத்திய அரசு வாகனங்களை திரும்ப பெறவேண்டும். தேர்தல் முடியும் வரை புதிய அறிவிப்புகள், பணி உயர்வு, இடமாற்றம் செய்தல் கூடாது. தேவைப்படும் இடங்களில் ஓய்வு பெற்ற கூட்டுறவுத்துறை அலுவலர்களை தேர்தல் பணியில் ஈடுபடுத்திக் கொள்ளலாம்.
மாவட்ட கலெக்டர், போலீஸ் சூப்பிரண்டு ஆகியோரின் மேற்பார்வையில் கூட்டுறவு சங்க தேர்தல் நடைபெறவுள்ளது. தேர்தல் நடத்தும் அலுவலர்கள் எந்த வித அச்சமும் இல்லாமல் கூட்டுறவு சங்க தேர்தலை நடத்த வேண்டும். வாக்காளர் பட்டியல் அலுவலர்கள் மற்றும் தேர்தல் அலுவலர்களுக்கான பயிற்சி வகுப்புகள் முறையாக நடத்தப்பட்டுள்ளது. தேர்தல் நடைபெறும் சங்கங்களுக்கு வாக்கு சீட்டினை அச்சிட்டு வழங்கிட முழுமையான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. வாக்கு சாவடி மையங்கள் கண்டறியப்பட்டு 600 வாக்கு பெட்டிகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. தேர்தல் குறித்த அறிவிப்புகள் முறையாக வெளியிடப்பட்டுள்ளது. கூட்டுறவு தேர்தலை முறையாக நடத்த அனைத்து அலுவலர்களும் ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
இந்த கூட்டத்தில் போலீஸ் சூப்பிரண்டு பண்டி கங்காதர். கூட்டுறவுச் சங்கங்களின் தேர்தல் ஆணைய கூடுதல் பதிவாளர் அந்தோணிசாமி ஜான்பீட்டர், மாவட்ட வருவாய் அலுவலர் சங்கர், கூட்டுறவுச் சங்கங்களின் இணைப்பதிவாளர்கள் பாண்டியன், ரேணுகா, வேளாண்மை இணை இயக்குனர் சுசிலா, துணை பதிவாளர்கள் சரவணன், ரவிச்சந்திரன் மற்றும் தேர்தல் நடத்தும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Related Tags :
Next Story