பெரும்பாலையில் தி.மு.க.வினர் சாலைமறியல் 33 பேர் கைது


பெரும்பாலையில் தி.மு.க.வினர் சாலைமறியல் 33 பேர் கைது
x
தினத்தந்தி 21 March 2018 4:00 AM IST (Updated: 21 March 2018 2:47 AM IST)
t-max-icont-min-icon

தி.மு.க. செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் சென்னையில் கைது செய்யப்பட்டதை கண்டித்து, பெரும்பாலை பஸ்நிறுத்தம் பகுதியில் தி.மு.க.வினர் சாலைமறியலில் ஈடுபட்டனர்.

ஏரியூர்,

தி.மு.க. செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் சென்னையில் கைது செய்யப்பட்டதை கண்டித்து, பெரும்பாலை பஸ்நிறுத்தம் பகுதியில் தி.மு.க.வினர் சாலைமறியலில் ஈடுபட்டனர். இதில் ஏரியூர் ஒன்றிய தி.மு.க.செயலாளர் செல்வராஜ், மாவட்ட மீனவர் அணி துனை அமைப்பாளர் சோலை மணி, ஊராட்சி செயலாளர் துரைசாமி, ஒன்றிய இளைஞர் அணி செயலாளர் அய்யந்துரை மற்றும் பலர் கலந்து கொண்டனர். இதையடுத்து சாலைமறியலில் ஈடுபட்டதாக 33 பேரை போலீசார் கைது செய்தனர். 

Next Story