கடலூர் ஆயுதப்படை மைதானத்தில் 2-ம் நிலை காவலர்களுக்கு துப்பாக்கி கையாளும் பயிற்சி


கடலூர் ஆயுதப்படை மைதானத்தில் 2-ம் நிலை காவலர்களுக்கு துப்பாக்கி கையாளும் பயிற்சி
x
தினத்தந்தி 21 March 2018 3:30 AM IST (Updated: 21 March 2018 3:56 AM IST)
t-max-icont-min-icon

கடலூர் ஆயுதப்படை மைதானத்தில் 2-ம் நிலை காவலர்களுக்கு துப்பாக்கி கையாளும் பயிற்சி நடைபெற்றது.

கடலூர், 

தமிழ்நாடு சீருடைப்பணியாளர் மூலம் தேர்வுசெய்யப்பட்ட 2-ம் நிலை காவலர்களில் 249 பேர் கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலக வளாகத்தில் உள்ள தற்காலிக காவலர் பயிற்சி பள்ளியில் கடந்த நவம்பர் மாதம் 1-ந் தேதி முதல் பயிற்சி பெற்று வருகிறார்கள். தற்காலிக காவலர் பயிற்சி பள்ளியின் முதல்வர் போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார் மேற்பார்வையில் தலைமை கவாத்து போதகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவசங்கரன் தலைமையில் துணை கவாத்து போதகர்கள் சப்-இன்ஸ்பெக்டர்கள் மகேந்திரன், நடராஜன், சந்திரா, பீமன் ஆகியோர் பயிற்சி அளித்து வருகிறார்கள்.

இந்த நிலையில் நேற்றுமுன்தினம் ஆயுதப்படை மைதானத்தில் 2-ம் நிலை காவலர்களுக்கு துப்பாக்கிகளை கையாளும் விதம் குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது. பின்னர் இது குறித்து போலீஸ் அதிகாரி ஒருவர் கூறும்போது, 2-ம் நிலை காவலர்களுக்கு மொத்தம் 7 மாதம் கவாத்து பயிற்சியும், ஒருமாதம் செய்முறை பயிற்சியும் அளிக்கப் படுகிறது. தற்போது 5-வது மாத பயிற்சியில் துப்பாக்கிகளை எவ்வாறு கையாள வேண்டும் என்பது குறித்து பயிற்சி அளிக்கப்படுகிறது. விரைவில் இவர்களுக்கு துப்பாக்கி சுடும் பயிற்சி அளிக்கப்பட உள்ளது. கவாத்து பயிற்சி மே மாதம் முடிவடையும். அதன்பிறகு ஒரு மாதம் போலீஸ் நிலையத்தில் செய்முறை பயிற்சி அளிக்கப்படும். இந்த பயிற்சி முடிந்ததும் அவர்கள் போலீஸ் நிலையங்களில் பணிக்கு பிரித்து அனுப்பி வைக்கப்படுவார்கள் என்றார்.

Next Story