சினிமாவில் நடிக்க வாய்ப்பு தேடி வந்தவரிடம் ரூ.47 லட்சம் மோசடி செய்தவருக்கு வலைவீச்சு
சினிமாவில் நடிக்க வாய்ப்பு தேடி வந்தவரிடம், ரூ.47 லட்சம் மோசடியில் ஈடுபட்டவரை போலீ சார் தேடிவருகின்றனர்.
மும்பை,
டெல்லியை சேர்ந்த தொழில் அதிபரின் மகன் விக்ரம் மல்கான். இவர் மும்பையில் தங்கி இருந்து இந்தி படத்தில் நடிக்க வாய்ப்பு தேடிவந்தார். இந்தநிலையில் இவருக்கு கடந்த சில மாதங்களுக்கு முன் அவினாஷ் ராய் என்பவரின் அறிமுகம் கிடைத்தது.
அவினாஷ் ராய் தான் சினிமா படத்தயாரிப்பாளர் என விக்ரம் மல்கானிடம் கூறினார். மேலும் அவரை வைத்து சினிமா படம் எடுப்பதாக ஆசைவார்த்தை கூறினார்.
இதை நம்பிய விக்ரம் மல்கான் அவரிடம் ரூ.47 லட்சம் வரை கொடுத்ததாக கூறப்படுகிறது. ஆனால் அவினாஷ் ராய், விக்ரம் மல்கானை வைத்து படம் எதுவும் எடுக்காமல் ஏமாற்றி வந்தார். இந்தநிலையில் அவினாஷ் ராய் செல்போனை ‘சுவிட்ச் ஆப்’ செய்துவிட்டு தலை மறைவானார்.
இது குறித்து விக்ரம் மல்கான் அம்போலி போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து, சினிமாவில் நடிக்க வைப்பதாக கூறி மோசடியில் ஈடுபட்டவரை தேடி வருகின்றனர்.

Related Tags :
Next Story