கத்தரிக்கோலின் கதை


கத்தரிக்கோலின் கதை
x
தினத்தந்தி 22 March 2018 10:30 PM GMT (Updated: 21 March 2018 9:45 AM GMT)

கத்தரிக்கோல்கள் 3 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே வழக்கத்திலிருக்கிறது.

ரோப்பா மற்றும் ஆசிய கண்டங்களில் வெண்கல கத்தரிக்கோல்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. அவை திருகுச் சுருள் வில் தத்துவத்தில் வடிவமைக்கப்பட்டிருந்தது. அப்போது ஆட்டு ரோமங்களை மழித்து எடுக்கவே இத்தகைய கத்தரிக்கோல்களை பயன்படுத்தினர்.

இப்போதைய கத்தரிக்கோல் சுமார் 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு உருவாக்கப்பட்டது. ரோமானியர்கள் இத்தகைய கத்தரிக்கோல்களை உருவாக்கியிருக்கலாம் என யூகிக்கப்படுகிறது. அவர்கள் கைப்பிடிக்கும், வெட்டும் பிளேடுகளுக்கும் நடுவில் இணைப்பு கொண்ட கத்தரிக்கோல்களை உருவாக்கி பயன்படுத்தினர்.

16-ம் நூற்றாண்டிலிருந்துதான் வீடுகள் தோறும் கத்தரி பயன்படுத்தும் வழக்கம் வந்தது. உறுதியான பொருட்களை வெட்டுவதற்கான கத்தரியை உருவாக்கியவர் ராபர்ட் ஹஞ்ச்லிபி ஆவார். 1761-ல் இவர் ‘பிரிசிசன்’ எனப்படும் முந்து கத்தரிக்கோல்களை உருவாக்கி விற்பனைக்குவிட்டார். துருப்பிடிக்காத உருக்கு உலோகம் மூலம் மருத்துவ அறுவைச் சிகிச்சைக்கான கத்திரிக்கோல்கள் தயாரிக்கப்படுகின்றன. 

Next Story