ஆழ்கடலுக்குள் அசத்தும் உணவகம்


ஆழ்கடலுக்குள் அசத்தும் உணவகம்
x
தினத்தந்தி 22 March 2018 11:00 PM GMT (Updated: 21 March 2018 9:53 AM GMT)

நார்வே நாட்டில் தனியார் நிறுவனம் ஒன்று, தங்களது வாடிக்கையாளர்களுக்கு வேறுபட்ட அனுபவத்தை வழங்கும் பொருட்டு, கடலுக்கடியில் உணவகம் ஒன்றை திறந்துள்ளது.

டற்கரையில் உணவகங்கள் அமைந்திருப்பது உலக நாடுகள் பலவற்றிலும் சர்வ சாதாரணம். ஆனால் நார்வே நாட்டில் திறக்கப்பட்டிருக்கும் இந்த ஆழ்கடல் உணவகத்தை உலக மக்கள் பலரும் வியந்து பார்க்கிறார்கள். 

இதன் முகப்பானது கடற்கரையிலும், கட்டிடமானது கடலுக்கு அடியில் 5 மீட்டர் ஆழத்திலும் அமைந்திருப்பது போன்று வடிவமைக்கப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டு மக்கள் பயன்பாட்டிற்கு வர இருக்கும் இந்த உணவகத்தில், தற்போது பாதுகாப்பு பரிசோதனைகளை மேற்கொண்டு வருகிறார்கள்.  

ஆழ்கடலின் அழகை கண்டு ரசித்தபடியே சாப்பிடக்கூடிய இந்த ஓட்டலில், ஒரே சமயத்தில் 100 பேர் அமர்ந்து உணவை சுவைக்கலாம். கடல் உணவுகள், இறைச்சி உணவுகள், மதுப்பிரியர்களை குஷிப்படுத்தும் மது வகைகள் என, இந்த ஆழ்கடல் உணவகத்தில் சகலமும் உண்டாம்.

Next Story