கை குழந்தையுடன் பனிச்சறுக்கு


கை குழந்தையுடன் பனிச்சறுக்கு
x
தினத்தந்தி 22 March 2018 11:30 PM GMT (Updated: 21 March 2018 10:03 AM GMT)

சுவிட்சர்லாந்தின் பிரபல பனிச்சறுக்கு வீரர் நிக்கோலஸ், தன் ஒன்றரை வயது மகனுடன் பனிச்சறுக்கு விளையாட்டில் ஈடுபட்ட வீடியோ வைரலாகி வருகிறது.

சுவிஸின் பிரபல பனிச்சறுக்கு வீரரான நிக்கோலஸ் பால்கெட்டுக்கு, புது புது சாதனைகள் படைப்பதில் எப்போதும் தனி ஆர்வம் உண்டு. 

அந்த வகையில் கடந்த 2015 ஏப்ரலில் மார்கோட்ஸ் பனிமலை பகுதியில் அவர் நிகழ்த்திய சாகச வீடியோ உலகம் முழுவதிலும் வைரலாகி இருந்தது. தற்போது வரை அந்த வீடியோவை 3 மில்லியன் நபர்கள் பார்த்துள்ளனர். இந்நிலையில், 17 மாத மகனுடன் பனிச்சறுக்கு விளையாட்டில் அவர் ஈடுபட்டுள்ள வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.

‘‘என்னுடைய மகன் மேக்ஸ் வெளியில் செல்லலாம் என ஜாடையாகக் கூறினான். அந்த அழைப்பை நான் மறக்க முடியாத அளவிற்கு மாற்ற நினைத்தேன். அதன் வெளிப்பாடு தான் இந்த பனிச்சறுக்கு வீடியோ. ஒன்றரை வயது குழந்தையுடன் பனிச்சறுக்கு செய்யலாமா? என்று எதிர்மறை கருத்துகள் வந்தால் மகிழ்ச்சியாக ஏற்றுக் கொள்வேன்’’ என்கிறார் நிக்கோலஸ்.

Next Story