பாளை. சதக்கத்துல்லா அப்பா கல்லூரியில் 868 மாணவ–மாணவிகளுக்கு பட்டம் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக பதிவாளர் சந்தோஷ் பாபு வழங்கினார்

பாளை. சதக்கத்துல்லா அப்பா கல்லூரியில் 868 மாணவ–மாணவிகளுக்கு பட்டம் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக பதிவாளர் சந்தோஷ் பாபு வழங்கினார்
x
தினத்தந்தி 22 March 2018 2:30 AM IST (Updated: 21 March 2018 5:29 PM IST)
t-max-icont-min-icon

பாளையங்கோட்டை சதக்கத்துல்லா அப்பா கல்லூரியில் நடந்த பட்டமளிப்பு விழாவில், பல்கலைக்கழக பதிவாளர் சந்தோஷ் பாபு கலந்துகொண்டு 868 மாணவ–மாணவிகளுக்கு பட்டம் வழங்கினார்.

நெல்லை,

பாளையங்கோட்டை சதக்கத்துல்லா அப்பா கல்லூரியில் நடந்த பட்டமளிப்பு விழாவில், பல்கலைக்கழக பதிவாளர் சந்தோஷ் பாபு கலந்துகொண்டு 868 மாணவ–மாணவிகளுக்கு பட்டம் வழங்கினார்.

பட்டமளிப்பு விழா

பாளையங்கோட்டை சதக்கத்துல்லா அப்பா கல்லூரியில் பட்டமளிப்பு விழா நடந்தது. கல்லூரி தாளாளர் பத்ஹூர் ரப்பானி தலைமை தாங்கி பேசினார். ஆட்சி குழு உறுப்பினர்கள் மீரான் முகைதீன், அப்துல்ரகுமான், முகமது நவாப் ஹூசைன், எம்.கே.எம்.முகமது நாசர், சுயநிதிப்பாடப்பிரிவு இயக்குனர் அப்துல்காதர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கல்லூரி முதல்வர் முகமது சாதீக் வரவேற்று பேசினார்.

நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக பதிவாளர் சந்தோஷ் பாபு சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு இளநிலை, முதுநிலை மாணவ–மாணவிகள் 868 பேருக்கு பட்டங்களை வழங்கி பேசினார்.

புனிதமான தொழில் விவசாயம்

அவர் பேசுகையில், இந்தியாவிலேயே புனிதமான தொழில் விவசாயம் தான். விவசாயம் தான் அடத்த நூற்றாண்டில் இந்தியாவை அழைத்து செல்ல உள்ளது எனவே பட்டம் பெற்ற பட்டதாரிகள், தங்களுக்கு அரசு வேலைதான் வேண்டும் என்று இருக்காமல் விவசாயத்திலும் ஈடுபடவேண்டும். கல்வியின் நோக்கம் பட்டம் வழங்குவது மட்டும் அல்ல மனிதனை முழுமையாக்குவது. ஆளுமை திறனை வளர்த்துக்கொள்ள சமூக தொடர்பு அதிகம் தேவை எனவே மாணவர்கள் சமூக தொடர்புடன் வாழவேண்டும். தங்கள் பெற்ற பட்டத்தை இந்த சமூகதாயத்தின் முன்னேற்றத்திற்கு நீங்கள் பயன்படுத்தவேண்டும் என்றார்.

விழாவில் பேராசிரியர்கள் சுப்பிரமணியன், மகாதேவன் மற்றும் பெற்றோர்கள், மாணவ–மாணவிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story