ஓய்வு பெற்ற அரசு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

குமரி மாவட்ட, தமிழ்நாடு ஓய்வு பெற்ற அரசு ஊழியர் சங்கம் சார்பில் நாகர்கோவிலில் கலெக்டர் அலுவலகம் முன் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.
நாகர்கோவில்,
குமரி மாவட்ட, தமிழ்நாடு ஓய்வு பெற்ற அரசு ஊழியர் சங்கம் சார்பில் நாகர்கோவிலில் கலெக்டர் அலுவலகம் முன் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. ஊதியக்குழுவில் மறுக்கப்பட்ட 21 மாத நிலுவைத் தொகையை வழங்க வேண்டும், குறைந்தபட்ச ஓய்வூதியமாக மாதம் ரூ.9 ஆயிரம் வழங்க வேண்டும், ஓய்வூதியர் மருத்துவ காப்பீடு திட்டத்தில் உள்ள குறைபாடுகளை களைய வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
இதற்கு மாவட்ட தலைவர் கனக சபாபதி தலைமை தாங்கினார். பொருளாளர் நல்லபெருமாள் முன்னிலை வகித்தார். இதில் முன்னாள் மாவட்ட தலைவர் சோமசுந்தரம் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்து பேசினார். மாவட்ட செயலாளர் முத்துக்குமார் கோரிக்கைகளை விளக்கி கூறினார்.

Related Tags :
Next Story