காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி 25-ந்தேதி திட்டமிட்டபடி உண்ணாவிரதம் நடைபெறும்


காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி 25-ந்தேதி திட்டமிட்டபடி உண்ணாவிரதம் நடைபெறும்
x
தினத்தந்தி 22 March 2018 4:30 AM IST (Updated: 22 March 2018 2:32 AM IST)
t-max-icont-min-icon

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி தஞ்சையில் 25-ந்தேதி திட்டமிட்டபடி உண்ணாவிரதம் நடைபெறும் என்று டி.டி.வி. தினகரன் கூறினார்.

தஞ்சாவூர்,

அம்மா மக்கள் முன்னேற்றக்கழகத்தின் ஆலோசனை கூட்டம் வருகிற 24-ந்தேதி திருச்சியில் நடைபெறுவதாக இருந்தது தள்ளி வைக்கப்படுகிறது. இந்த கூட்டம் ஏப்ரல் முதல்வாரத்தில் நடைபெறும். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி தஞ்சையில் 25-ந்தேதி (ஞாயிற்றுக் கிழமை) அறிவிக்கப்பட்ட உண்ணாவிரதம் திட்டமிட்டபடி நடைபெறும்.

சசிகலா தான் பொதுச்செயலாளர்

எங்கள் அணியின் பெயரை தற்காலிகமாக மாற்றி வைத்துள்ளோம். அம்மா மக்கள் முன்னேற்றக்கழகத்துக்கு பொதுச்செயலாளர் சசிகலா தான். அதே போல் மற்ற நிர்வாகிகளும் அதே பொறுப்புகளில் தான் உள்ளனர்.

இவ்வாறு அவர் கூறினார். 

Next Story