கத்தரிப்புலத்தில் விவசாயிகள் காத்திருப்பு போராட்டம் 94-வது நாளாக நடந்தது
கத்தரிப்புலத்தில் விவசாயிகள் 94-வது நாளாக காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
வேதாரண்யம்,
நாகை மாவட்டம் வேதாரண்யம் பகுதியை சேர்ந்த விவசாயிகளுக்கு 2016-2017-ம் ஆண்டுக்கான பயிர்க்காப்பீட்டு தொகை வழங்கப்படவில்லை. இதை கண்டித்தும் பயிர்க்காப்பீட்டு தொகையை உடனடியாக வழங்கக்கோரியும் வேதாரண்யம் அருகே உள்ள கத்தரிப்புலம் கிராமத்தில் குரவப்புலம், கத்தரிப்புலம், செம்போடை உள்ளிட்ட பல்வேறு கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.
அங்கு உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி முன்பு காத்திருப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது.
94-வது நாளாக...
நேற்று 94-வது நாளாக காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்துக்கு வட்டார விவசாயிகள் சங்க தலைவர் ராஜன் தலைமை தாங்கி கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார். விவசாய சங்க செயலாளர் ஒளிச்சந்திரன், பொருளாளர் அருண், கத்தரிப்புலம் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர்கள் வீரமணி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Related Tags :
Next Story