முன்விரோத தகராறில் 4 பேருக்கு அரிவாள் வெட்டு இரு தரப்பினர் புகாரில் 7 பேர் கைது
கரூர் அருகே முன்விரோத தகராறில் 4 பேருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது. இரு தரப்பினர் புகாரின் பேரில் 7 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
நொய்யல்,
கரூர் மாவட்டம் வேலாயுதம்பாளையம் அருகே கட்டிபாளையத்தை சேர்ந்தவர் ரத்தினவேலு (வயது55). இவரும் அதே பகுதியை சேர்ந்த மலையப்பன் (23), பாக்கியராஜ் (33), கோபி (33) மற்றும் சிலர் பாக்கியராஜ் வீட்டின் அருகில் நேற்று முன்தினம் நின்று கொண்டிருந்தனர்.
ரத்தினவேலுவுக்கும், அப்பகுதியை சேர்ந்த சக்திவேல் (18) மற்றும் சிலருக்கும் கட்டிபாளையத்தில் பொங்கல் பண்டிகையின் போதும், விளையாட்டு போட்டிகள் நடத்தியபோதும் தகராறு ஏற்பட்டு முன் விரோதம் இருந்து வந்தது.
இந்த நிலையில் ரத்தினவேலுவையும், அவருடன் நின்றவர்களையும் பார்த்து சக்திவேல் தகாத வார்த்தைகளால் திட்டி வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அப்போது இரு தரப்பினருக்கும் தகராறு ஏற்பட்டது.
அரிவாள் வெட்டு
இந்த நிலையில் ஆத்திரமடைந்த சக்திவேல், தங்கராஜ் (40), சந்தோஷ் (19), ரமேஷ் (21), ராஜா (24), பாலா (19), ரஷீர் (19) ஆகியோர் அரிவாளால் ரத்தினவேலு, மலையப்பன், பாக்கியராஜ், கோபி ஆகியோரை சரமாரியாக வெட்டி கொலை மிரட்டல் விடுத்து விட்டு தப்பியோடினர்.
இதில் பலத்த காயமடைந்த 4 பேரும் சிகிச்சைக்காக வேலாயுதம்பாளையம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக ரத்தினவேலு கரூருக்கும், பாக்கியராஜ், கோபி ஆகியோர் நாமக்கல் அரசு மருத்துவமனைக்கும், மலையப்பன் பரமத்தி வேலூர் அரசு மருத்துவமனைக்கும் கொண்டு செல்லப்பட்டனர். அங்கு 4 பேரும் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.
7 பேர் கைது
இந்த சம்பவம் குறித்து வேலாயுதம்பாளையம் போலீஸ் நிலையத்தில் ரத்தினவேலு புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தங்கராஜ், சந்தோஷ், ரமேஷ், ராஜா ஆகிய 4 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதேபோல சக்திவேல் அளித்த புகாரின் பேரில் ரத்தினவேலு, மலையப்பன், பாக்கியராஜ், கோபி, பிரகாஷ் (26), பிரபாகரன் (32), பரமசிவம் (45) ஆகியோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதில் கட்டிபாளையத்தை சேர்ந்த பிரகாஷ், பிரபாகரன், பரமசிவம் ஆகிய 3 பேர் கைது செய்யப்பட்டனர். இரு தரப்பு புகாரின் பேரில் மொத்தம் 7 பேர் கைது செய்யப்பட்டனர். முன்விரோதத்தில் மோதிக்கொண்டவர்கள் அனைவரும் கூலித்தொழிலாளிகள் ஆவார்கள்.

Related Tags :
Next Story