புதுவை அரசு வேளாண்துறை இயக்குனராக பாலகாந்தி நியமனம்


புதுவை அரசு வேளாண்துறை இயக்குனராக பாலகாந்தி நியமனம்
x
தினத்தந்தி 22 March 2018 3:30 AM IST (Updated: 22 March 2018 3:29 AM IST)
t-max-icont-min-icon

புதுவை அரசு வேளாண்துறை இயக்குனராக பாலகாந்தி நியமிக்கப்பட்டுள்ளார்.

புதுச்சேரி,

புதுவை பெருந்தலைவர் காமராஜர் வேளாண் அறிவியல் நிலைய முதல்வர் மற்றும் திட்ட ஒருங்கிணைப்பாளர் பதவி வகித்து வருபவர் ராமகிருஷ்ணன் என்ற பாலகாந்தி. இவர் கூடுதல் வேளாண் இயக்குனர்(உழவியல்) பதவி வகித்து வருகிறார். தற்போது அவர் பெருந்தலைவர் காமராஜர் வேளாண் அறிவியல் நிலைய முதல்வர் மற்றும் திட்ட ஒருங்கிணைப்பாளர் பதவியில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். அவருக்கு வேளாண் துறை இயக்குனர் பதவி வழங்கப்பட்டுள்ளது.

வேளாண்துறை இயக்குனர் மற்றும் பாசிக் மேலாண் இயக்குனர் பதவி வசித்து வந்த ராமமூர்த்தி வேளாண்துறை இயக்குனர் பதவியில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். அவர் பாசிக் மேலாண் இயக்குனர் பதவியை கவனிப்பார்.

பாப்ஸ்கோ மேலாண் இயக்குனர் பதவி வகித்து வந்த வசந்தகுமார், பெருந்தலைவர் காமராஜர் வேளாண் அறிவியல் நிலைய முதல்வர் மற்றும் திட்ட ஒருங்கிணைப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். வேளாண்துறை துணை இயக்குனர் முத்துக்கிருஷ்ணன், பாப்ஸ்கோ மேலாண் இயக்குனராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இதற்கான உத்தரவை அரசு துணை செயலாளர் சாரதி பிறப்பித்துள்ளார். 

Next Story