மாற்றுத்திறனாளிகளுக்கு ‘கூகுள் மேப்’பில் புதிய வசதி


மாற்றுத்திறனாளிகளுக்கு ‘கூகுள் மேப்’பில் புதிய வசதி
x
தினத்தந்தி 24 March 2018 1:00 AM GMT (Updated: 22 March 2018 10:18 AM GMT)

உலகின் முக்கியமான பகுதிகளை மட்டுமின்றி, அவற்றுக்கு பயணிக்கக்கூடிய பாதைகளையும் காட்டு வசதியைக் கொண்டுள்ள அப்ளிக்கேஷனே ‘கூகுள் மேப்’ என்று உங்களுக்குத் தெரியும்.

கூகுள் மேப் ‘ஆப்’ மூலம், குறிப்பிட்ட ஓர் இடத்துக்கு ரெயில், காரில் செல்வதற்கும், நடந்து செல்வதற்கும் பாதை வழிகாட்டல்களும் அதற்கு ஆகும் நேரமும் காட்டப்படும்.

அதனால், கூகுள் மேப் ஆப் உலக மக்கள் மத்தியில் நல்ல வரவேற்புப் பெற்றுள்ளது.

இந்நிலையில், கூகுள் மேப்பில் மற்றொரு புதிய வசதி அறிமுகம் செய்யப்பட்டிருக்கிறது. அதாவது, சக்கர நாற்காலியைப் பயன்படுத்தும் மாற்றுத்திறனாளிகள் பயணிக்கக்கூடிய பாதைகளை சுட்டிக் காட்டக்கூடிய வசதி.

இந்த வசதியில் இப்போதைக்கு உலகின் முக்கியமான நகரங்கள் மட்டும் உள்ளடக்கப்பட்டுள்ளன.

அதன்படி, லண்டன், நியூயார்க், டோக்கியோ, மெக்சிகோ சிட்டி, பாஸ்டன், சிட்னி ஆகிய நகரங்களில் சக்கர நாற்காலிகள் மூலம் செல்லக்கூடிய பாதைகளை அறிந்துகொள்ள முடியும்.

இந்த வசதி மேலும் பல உலக நகரங்களுக்கு விரிவாக்கப்படும் என்று கருதப்படுகிறது.

மாற்றுத்திறனாளிகளுக்கு உதவும் எந்த வசதியும் வரவேற்புக்குஉரியதே!

Next Story