சென்னை முகப்பேரில் மினி பஸ் டிரைவர்–கண்டக்டர் மீது தாக்குதல்
சென்னை முகப்பேரில் மினி பஸ் டிரைவர் மற்றும் கண்டக்டர் மீது தாக்குதல் நடத்தியவர்களை கைது செய்யக்கோரி சக போக்குவரத்து ஊழியர்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
அம்பத்தூர்,
மதுரவாயல் ஏரிக்கரையில் இருந்து முகப்பேர் மேற்கு டி.வி.எஸ். காலனி பஸ் நிலையம் நோக்கி நேற்று முன்தினம் இரவு மாநகர மினி பஸ்(தடம் எண் 42) வந்து கொண்டிருந்தது. பஸ்சை டிரைவர் அன்பழகன்(வயது 39) என்பவர் ஓட்டினார். கண்டக்டர் அரி(28) பணியில் இருந்தார். பஸ்சில் 10 பயணிகள் மட்டும் இருந்தனர்.
சென்னை முகப்பேரில் உள்ள ஒரு தனியார் பள்ளி அருகே வந்தபோது, அந்த வழியாக குடிபோதையில் நடந்து வந்த ஒரு வாலிபருக்கும், மினி பஸ் டிரைவர் அன்பழகனுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.
அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர், திடீரென டிரைவர் அன்பழகனை மினி பஸ்சில் இருந்து கீழே இறக்கி சரமாரியாக தாக்கினர். இதை தடுக்க முயன்ற கண்டக்டர் அரியையும் தாக்கினர். இந்த தாக்குதலில் டிரைவர் அன்பழகனுக்கு வலது கையில் லேசான எலும்பு முறிவு ஏற்பட்டதாக தெரிகிறது.
பின்னர் அந்த ஆசாமிகள், மோட்டார் சைக்கிளை அங்கேயே போட்டு விட்டு தப்பி ஓடிவிட்டனர். மினி பஸ் டிரைவர், கண்டக்டருக்கு ஆதரவாக அந்த வழியாக வந்துகொண்டு இருந்த மாநகர பஸ்களை சாலையில் நிறுத்திய சக போக்குவரத்து ஊழியர்கள், டிரைவர் மற்றும் கண்டக்டர் மீது தாக்குதல் நடத்தியவர்களை கைது செய்யக்கோரி சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதுபற்றி தகவல் அறிந்து வந்த கொரட்டூர் போலீசார், சாலை மறியலில் ஈடுபட்ட போக்குவரத்து ஊழியர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் மினி பஸ் டிரைவருடன் குடிபோதையில் தகராறில் ஈடுபட்டதாக முகப்பேர் நக்கீரன் தெருவைச் சேர்ந்த ராஜ்குமார் (25) என்பவரை போலீசார் கைது செய்தனர்.
மேலும் டிரைவர், கண்டக் டரை தாக்கி விட்டு தப்பி ஓடிய முகப்பேர் பகுதியை சேர்ந்த விக்னேஷ் (26), பிரசாந்த் (25) ஆகிய இருவரையும் விரைவில் கைது செய்து விடுவதாகவும் போலீசார் உறுதி அளித்தனர்.
அதை ஏற்று சாலை மறியலை கைவிட்ட போக்குவரத்து ஊழியர்கள், மீண்டும் பஸ்களை இயக்கத்தொடங்கினார்கள். இதனால் அந்த பகுதியில் சுமார் அரை மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Related Tags :
Next Story