குமரி அனந்தனின் 86-வது பிறந்தநாள் விழா


குமரி அனந்தனின் 86-வது பிறந்தநாள் விழா
x
தினத்தந்தி 22 March 2018 11:15 PM GMT (Updated: 22 March 2018 7:41 PM GMT)

தமிழக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் குமரிஅனந்தனின் 86-வது பிறந்தநாள் விழா, சென்னை தேனாம்பேட்டையில் உள்ள காமராஜர் அரங்கத்தில் நேற்று நடைபெற்றது.

சென்னை,

விழாவுக்கு தமிழக காங்கிரஸ் தலைவர் சு.திருநாவுக்கரசர் தலைமை தாங்கினார். அவர் குமரி அனந்தனுக்கு நினைவுப்பரிசு வழங்கினார்.

புதுச்சேரி முதல்-அமைச்சர் வி.நாராயணசாமி, திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி, தி.மு.க. துணை பொதுச்செயலாளர் வி.பி.துரைசாமி, ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவர் தா.பாண்டியன், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன், பா.ம.க. துணை பொதுச்செயலாளர் ஏ.கே.மூர்த்தி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு செயற்குழு உறுப்பினர் அ.சவுந்தரராசன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் கே.எம்.காதர் மொய்தீன், எஸ்.டி.பி.ஐ. கட்சி தலைவர் தெஹலான் பாகவி, கவிஞர் வைரமுத்து, தொழில் அதிபர் வி.ஜி.சந்தோசம் ஆகியோர் வாழ்த்தி பேசினார்கள்.

சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் கே.ஆர்.ராமசாமி, தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர்கள் கே.வி.தங்கபாலு, ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், முன்னாள் மத்திய மந்திரி சுதர்சன நாச்சியப்பன், தேசிய செயலாளர் ஏ.செல்லக்குமார், துணைத் தலைவர் எச்.வசந்தகுமார், பொதுசெயலாளர் கே.சிரஞ்சீவி, தமிழ்நாடு நாடார் சங்க தலைவர் முத்துரமேஷ் நாடார், காமராஜர் ஆதித்தனார் கழகத் தலைவர் சிலம்பு சுரேஷ் உள்ளிட்டோரும் கலந்து கொண்டு குமரிஅனந்தனுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

நிகழ்ச்சியில் குமரி அனந்தன் ஏற்புரை நிகழ்த்தினார். தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் எம்.கிருஷ்ணசாமி வரவேற்று பேசினார்.

Next Story