நாயக்கன்கொட்டாயில் நடந்த வன்முறை தொடர்பான 4 வழக்குகளில் 57 பேர் விடுதலை கோர்ட்டு தீர்ப்பு
நாயக்கன்கொட்டாயில் நடந்த வன்முறை தொடர்பான 4 வழக்குகளில் சிக்கிய 57 பேரை விடுதலை செய்து தர்மபுரி மாவட்ட கூடுதல் அமர்வு கோர்ட்டு தீர்ப்பளித்தது.
தர்மபுரி,
தர்மபுரி மாவட்டம் நாயக்கன்கொட்டாய் அருகே உள்ள நத்தம் காலனியை சேர்ந்தவர் இளவரசன். இவரும் செல்லன்கொட்டாயை சேர்ந்த திவ்யா என்ற பெண்ணும் காதல் திருமணம் செய்து கொண்டனர். இவர்கள் 2 பேரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள். இந்த நிலையில் 2012-ம் ஆண்டு நவம்பர் மாதம் 7-ந்தேதி திவ்யாவின் தந்தை நாகராஜ் தற்கொலை செய்து கொண்டார்.
இதையடுத்து நாயக்கன்கொட்டாய் பகுதியில் கலவரம் ஏற்பட்டது. இந்த கலவரத்தின்போது சாலை மறியல் போராட்டம் நடந்தது. அந்த வழியாக சென்ற சில வாகனங்கள் சேதப்படுத்தப்பட்டன. இந்த கலவரம் நடந்து சில மாதங்கள் கழித்து இளவரசனை பிரிந்த திவ்யா தாய் வீட்டிற்கு சென்றார். அதன் பின்னர் 2013-ம் ஆண்டு ஜூலை மாதம் 4-ந்தேதி இளவரசன் தர்மபுரியில் ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார்.
57 பேர் விடுதலை
இந்த நிலையில் நாகராஜ் இறந்தபோது நடைபெற்ற சாலைமறியல் மற்றும் அப்போது நடைபெற்ற சில வன்முறை, கலவர சம்பவங்கள் தொடர்பாக கிருஷ்ணாபுரம் போலீசார் பதிவு செய்த வழக்குகளில் 4 வழக்குகள் தர்மபுரி மாவட்ட கூடுதல் அமர்வு கோர்ட்டில் விசாரணைக்கு வந்தன.
விசாரணையின் முடிவில் இந்த வழக்குகளில் உள்ளவர்கள் மீதான குற்றச்சாட்டுகள் உரிய ஆதாரங்களுடன் நிரூபிக்கப்படவில்லை. இதனால் இந்த வழக்குகளில் சிக்கிய 57 பேரை விடுதலை செய்து மாவட்ட கூடுதல் அமர்வு நீதிபதி ஜீவானந்தம் தீர்ப்பளித்தார்.

Related Tags :
Next Story