முன்விரோதத்தில் தகராறு: பெண் வக்கீலை தாக்கி கொலை மிரட்டல்; வாலிபர் கைது
மயிலாடுதுறை அருகே முன்விரோதத்தில் ஏற்பட்ட தகராறில் பெண் வக்கீலை தாக்கி கொலை மிரட்டல் விடுத்த வாலிபரை போலீசார் கைது செய்தனர். மேலும், சம்பவம் தொடர்பாக 2 பெண்களை வலைவீசி தேடி வருகின்றனர்.
குத்தாலம்,
நாகை மாவட்டம், மயிலாடுதுறை அருகே திருவிளையாட்டம் கால்வாய்க்கரை தெருவை சேர்ந்தவர் அந்தோணிதாஸ் மகள் நிர்மலா (வயது 27). இவர், மயிலாடுதுறை கோர்ட்டில் வக்கீலாக பணியாற்றி வருகிறார். இவரது உறவினர் பக்கத்து வீட்டை சேர்ந்த பிரகலாதன் மகன் ஏசுராஜ் (29). இருவர் குடும்பத்தினருக்கும் இடையே இடப்பிரச்சினை தொடர்பாக முன்விரோதம் இருந்து வருகிறது. சம்பவத்தன்று நிர்மலா, வீட்டில் இருந்த தனது தம்பி வின்சென்டை திட்டியதாக தெரிகிறது. இதனை கேட்ட ஏசுராஜ், தன்னை தான் திட்டுவதாக நினைத்து கொண்டு நிர்மலாவிடம் தகராறில் ஈடுபட்டார்.
கைது
இதனையடுத்து ஏசுராஜ், அவருடைய மனைவி ஆஷா, தாய் வியாக்கியமேரி ஆகிய 3 பேரும் சேர்ந்து நிர்மலா வீட்டு வாசலில் இருந்த வேலியை பிரித்து எரிந்ததாக தெரிகிறது. மேலும் அவர்கள், நிர்மலாவின் வீட்டிற்குள் நுழைந்து அவரை துடைப்பத்தால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதில் காயம் அடைந்த நிர்மலா, மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். சம்பவம் தொடர்பாக நிர்மலா கொடுத்த புகாரின் பேரில் பெரம்பூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சீனிவாசன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஏசுராஜை கைது செய்தனர். மேலும், சம்பவம் தொடர்பாக ஆஷா, வியாக்கியமேரி ஆகிய 2 பேரையும் போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Related Tags :
Next Story