திருவண்ணாமலை கலெக்டரை கண்டித்து அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்


திருவண்ணாமலை கலெக்டரை கண்டித்து அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 23 March 2018 4:15 AM IST (Updated: 23 March 2018 2:25 AM IST)
t-max-icont-min-icon

திருவண்ணாமலை கலெக்டரை கண்டித்து நாகையில் அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

நாகப்பட்டினம்,

நாகை தாலுகா அலுவலகம் முன்பு தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில், பெண்களை இழிவாக பேசிய திருவண்ணாமலை மாவட்ட கலெக்டரை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு அரசு ஊழியர் சங்க வட்ட துணை தலைவர் மூர்த்தி தலைமை தாங்கினார். வருவாய் துறை அலுவலர் சங்க மாவட்ட பொறுப்பாளர் பிச்சைபிள்ளை முன்னிலை வகித்தார். இதில் வட்ட செயலாளர் தமிழ்வாணன் கலந்து கொண்டு பேசினார்.

பெண்களை இழிவாகவும், தரக்குறைவாகவும் பேசிய திருவண்ணாமலை மாவட்ட கலெக்டரை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் கோஷங்கள் எழுப்பப்பட்டன.

இதில் சி.ஐ.டி.யு. மாவட்ட செயலாளர் சீனி. மணி உள்பட பலர் கலந்து கொண்டனர். 

Next Story