புதுக்கோட்டையில் உதவி வேளாண்மை அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்


புதுக்கோட்டையில் உதவி வேளாண்மை அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 23 March 2018 4:00 AM IST (Updated: 23 March 2018 2:26 AM IST)
t-max-icont-min-icon

தமிழ்நாடு உதவி வேளாண்மை அலுவலர்கள் சங்கம் சார்பில் புதுக்கோட்டை திலகர் திடலில் நேற்று மாலை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் மாநில இணைச்செயலாளர் முத்துக்குமார் தலைமை தாங்கினார்.

புதுக்கோட்டை,

தமிழ்நாடு உதவி வேளாண்மை அலுவலர்கள் சங்கம் சார்பில் புதுக்கோட்டை திலகர் திடலில் நேற்று மாலை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் மாநில இணைச்செயலாளர் முத்துக்குமார் தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் சிவராசு முன்னிலை வகித்தார். தற்போது வேளாண்மைத்துறை, தோட்டக்கலைத்துறை, வேளாண்மை விற்பனை மற்றும் வணிகத்துறைகளில் மீண்டும் பல பணியிடங்களை காலி செய்வதற்கான முயற்சிகளை அரசு மேற்கொண்டு வருகிறது. இந்த நடவடிக்கைகளை கண்டித்தும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் சங்கத்தின் மாவட்ட செயலாளர் விஜயகுமார், தலைவர் நாக ராஜன் மற்றும் உதவி வேளாண்மை அலுவலர்கள், உதவி தோட்டக்கலை அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story