போலீஸ் சூப்பிரண்டு அலுவலக வளாகத்தில் லாரி டிரைவர், மனைவியுடன் தீக்குளிக்க முயற்சி
அபகரிக்கப்பட்ட நிலத்தை மீட்டுத்தர போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை என கூறி போலீஸ் சூப்பிரண்டு அலுவலக வளாகத்தில் லாரி டிரைவர், தனது மனைவியுடன் தீக்குளிக்க முயன்ற சம்பவம் நேற்று நாமக்கல்லில் பரபரப்பை ஏற்படுத்தியது.
நாமக்கல்,
நாமக்கல் ஏ.எஸ்.பேட்டை திருவள்ளுவர் நகரில் வசித்து வருபவர் கந்தசாமி (வயது 55), லாரி டிரைவர். இவரது வீட்டையொட்டி 60 சென்ட் காலி இடம் உள்ளது. இந்த நிலத்தினை அதே பகுதியை சேர்ந்த சிலர் அபகரிப்பு செய்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து நிலத்தை அபகரித்த நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி கந்தசாமி, நாமக்கல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் செய்தார். ஆனால் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது.
இதனால் மனம் உடைந்த கந்தசாமி அபகரிக்கப்பட்ட நிலத்தை மீட்டு தர நடவடிக்கை எடுக்காத போலீசாரை கண்டித்து தனது மனைவி சாந்தியுடன் நாமக்கல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலக வளாகத்திற்கு நேற்று வந்தார். அங்கு அவர்கள் மண்எண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றனர்.
அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீஸ்காரர் தம்பதியினரை தடுத்து நிறுத்தி, அவர்களிடம் இருந்த மண்எண்ணெய் கேனை பறித்ததோடு, அவர்கள் மீது தண்ணீர் ஊற்றினார். அதன்பின்பு இருவரையும் போலீஸ் சூப்பிரண்டு அருளரசுவிடம் போலீசார் அழைத்து சென்றனர். அவர் கந்தசாமி மற்றும் அவரது மனைவி சாந்தி ஆகியோரிடம் விசாரணை நடத்தினார்.
இதேபோல் பள்ளிபாளையம் ஆவாரங்காடு பகுதியை சேர்ந்த வசந்தா என்பவர், தனது வீட்டில் வாடகைக்கு குடியிருக்க வந்த நபர் போலி ஆவணம் தயாரித்து வீட்டை ஆக்கிரமித்து கொண்டதாகவும், வீட்டை திரும்ப ஒப்படைக்குமாறு கேட்டால் கொலை மிரட்டல் விடுவதாகவும் கூறி புகார் மனுவுடன் நேற்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் வந்தார். அவர் இது தொடர்பாக போலீசாரிடம் புகார் தெரிவித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறி, போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் பாதுகாப்பு பணியில் இருந்த போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இந்த இரு சம்பவமும் நேற்று நாமக்கல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலக வளாகத்தில் பரபரப்பை ஏற்படுத்தின.
இதற்கிடையே தீக்குளிக்க முயன்ற கந்தசாமி, அவரது மனைவி சாந்தி மற்றும் அவர்களை தீக்குளிக்க தூண்டியதாக செந்தில் ஆகிய 3 பேர் மீதும் நல்லிபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Tags :
Next Story