பாரதீய ஜனதா கட்சியை சேர்ந்த 3 எம்.எல்.ஏ.க்கள் நியமனம் செல்லும்
புதுச்சேரி சட்டசபைக்கு பாரதீய ஜனதா கட்சியை சேர்ந்த 3 பேரை எம்.எல்.ஏ.க்களாக மத்திய அரசு நியமித்தது செல்லும் என்று சென்னை ஐகோர்ட்டு தீர்ப்பு கூறி உள்ளது.
சென்னை,
புதுச்சேரியில் காங்கிரஸ், தி.மு.க. கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது.
புதுச்சேரியில் பாரதீய ஜனதா கட்சியை சேர்ந்த வி.சாமிநாதன், கே.ஜி.சங்கர், செல்வ கணபதி ஆகிய 3 பேர் நியமன எம்.எல்.ஏ.க்களாக மத்திய அரசால் நியமிக் கப்பட்டனர். இது ஆளும் காங்கிரஸ் கட்சிக்கு அதிர்ச்சியாக அமைந்தது.
இதையடுத்து ராஜ் பவன் தொகுதி எம்.எல்.ஏ.வும், அரசு கொறடாவுமான லட்சுமி நாராயணன், சென்னை ஐகோர்ட்டில் ஒரு வழக்கு தாக்கல் செய்தார்.
புதுச்சேரி யூனியன் பிரதேச சட்டசபைக்கு 3 நியமன உறுப்பினர்களை நியமிக்க யூனியன் பிரதேச அரசுகளுக்கான சட்டம் வழிவகை செய்கிறது. அதன்படி வி.சாமிநாதன், கே.ஜி.சங்கர், செல்வகணபதி ஆகியோரை நியமன உறுப்பினர்களாக மத்திய அரசு நியமனம் செய்து கடந்த ஆண்டு ஜூன் மாதம் 23-ந் தேதி உத்தரவிட்டது.
மாநில அரசை கலந்து ஆலோசிக்காமல் நியமன உறுப்பினர்களை மத்திய அரசு நியமிக்க முடியாது. மாநில அரசின் அதிகாரத்தை பறிக்கும் வகையில் மத்திய அரசு செயல்பட்டு உள்ளது. விதி முறைகளுக்கு புறம்பாக அவர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். எனவே, புதுச்சேரி சட்டசபைக்கு நியமன உறுப்பினர்களாக 3 பேரை நியமித்து மத்திய அரசு பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது. இதேபோன்று தனலட்சுமி என்பவரும் வழக்கு தொடர்ந்து இருந்தார்.
இந்த 3 நியமன உறுப்பினர்களுக்கு பதவிப்பிரமாணம் செய்து வைக்க சபாநாயகர் வைத்திலிங்கம் மறுத்ததை தொடர்ந்து கவர்னர் கிரண் பெடி அவர்களுக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
இந்த நிலையில், அவர்கள் எம்.எல்.ஏ.க்களாக நியமிக்கப்பட்டது சட்டத்துக்கு புறம்பானது என்று கூறி அவர்கள் சட்டசபை நடவடிக்கைகளில் கலந்து கொள்ள அனுமதி மறுத்து சபாநாயகர் உத்தரவிட்டார்.
இந்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்று சாமிநாதன் உள்பட 3 நியமன எம்.எல்.ஏ.க்களும் தனித்தனியாக மனு தாக்கல் செய்தனர். இந்த வழக்குகளை தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி எம்.சுந்தர் ஆகியோர் விசாரித்தனர்.
கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 29-ந்தேதி அனைத்து தரப்பு வாதங்களும் முடிவு அடைந்த நிலையில் தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை நீதிபதிகள் தள்ளிவைத்தனர். இந்த நிலையில் நேற்று அந்த வழக்கில் நீதிபதிகள் தீர்ப்பு கூறினர். தீர்ப்பு விவரம் வருமாறு:-
யூனியன் பிரதேசங்களைப் பொறுத்தமட்டில் நியமன எம்.எல்.ஏ.க்களை நியமிக்க மத்திய அரசுக்கு உரிமை உள்ளது. அவ்வாறு நியமிக்கும் முன்பு மாநில அரசின் கருத்தை கேட்டு அறிய வேண்டும் என்று எந்த கட்டாயமும் இல்லை.
நியமன எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்ய சபாநாயகருக்கு எந்த அதிகாரமும் இல்லை. அவர்களை சட்ட சபைக்குள் அனுமதிக்க முடியாது என்பது சரியல்ல. இந்த 3 நியமன எம்.எல்.ஏ.க்களின் நியமனத்திற்கு எதிராக ஜனாதிபதியிடம் தான் முறையிட வேண்டும். எனவே, புதுச்சேரியில் 3 நியமன எம்.எல்.ஏ.க்களை நியமித்து மத்திய அரசு பிறப்பித்த உத்தரவு செல்லும். இந்த உத்தரவை எதிர்த்து தாக்கல் செய்த மனுக்கள் தள்ளுபடி செய்யப்படுகின்றன.
இவர்களின் நியமனம் சட்டப்படி செல்லும் என்பதால், அவர்களை சட்ட சபைக்குள் அனுமதிக்க முடியாது என்று புதுச்சேரி சபாநாயகர் பிறப்பித்த உத்தரவு ரத்து செய்யப்படுகிறது. நியமன எம்.எல்.ஏ.க்களை சட்டசபைக்குள் அனுமதிக்க வேண்டும். இவ்வாறு தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.

Related Tags :
Next Story