விவசாயிகள் ரூ.17 ஆயிரம் கோடி மின்கட்டணம் பாக்கி


விவசாயிகள் ரூ.17 ஆயிரம் கோடி மின்கட்டணம் பாக்கி
x
தினத்தந்தி 23 March 2018 4:16 AM IST (Updated: 23 March 2018 4:16 AM IST)
t-max-icont-min-icon

மராட்டியத்தில் ரூ.17 ஆயிரம் கோடி அளவுக்கு விவசாயிகள் மின் கட்டணம் பாக்கி வைத் துள்ளதாக முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் தெரிவித்தார்.

மும்பை,

சட்டசபையில் தேசியவாத காங்கிரஸ் கட்சியை சேர்ந்த அஜித் பவார், மின் கட்டணம் செலுத்தாத விவசாயிகளின் மின் இணைப்புகளை அரசு துண்டித்து வருவதாகவும், ஆளும் பா.ஜனதா அரசு ஏழை விவசாயிகளிடம் அநியாயமாக நடந்து கொள்வதாகவும் குற்றம் சாட்டினார்.

இதையடுத்து அஜித் பவாரின் குற்றச்சாட்டுக்கு பதிலளித்து பேசிய முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ், ரூ.17 ஆயிரம் கோடி வரையில் விவசாயிகள் மின்கட்டண பாக்கி வைத்துள்ளதாக தெரிவித்தார்.

இது குறித்து மேலும் அவர் கூறியதாவது:-

விவசாயிகளின் மின்கட் டண பாக்கி அதிகரித்ததைத் தொடர்ந்து மராட்டிய மின்வாரிய ஒழுங்குமுறை கமிஷன், மாநில அரசிடம் அவற்றை வசூலிக்குமாறு கோரியது. அரசும் இதற்கான பணிகளை முதலில் தொடங்கியது.

அதன் பின்னர் விவசாயிகளின் துயரங்களை கருத்தில் கொண்டு அவர்களிடம் மின் கட்டணம் வசூலிப்பதை தற்காலிகமாக நிறுத்தி உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார். 

Next Story