ஈரோட்டில் பட்டப்பகலில் துணிகரம் முகத்தில் மிளகாய்பொடி தூவி பெண்ணிடம் கொள்ளை முயற்சி
பெண்ணின் முகத்தில் மிளகாய்பொடி தூவி கொள்ளை முயற்சி நடந்தது.
ஈரோடு,
ஈரோட்டில் பட்டப்பகலில் பெண்ணின் முகத்தில் மிளகாய்பொடி தூவி கொள்ளை முயற்சி நடந்தது. தாலிக்கயிறு மட்டும் அணிந்திருந்ததால் ஏமாந்த திருடன் தப்பி ஓடிவிட்டான்.
ஈரோடு பெரியவலசு பகுதியை சேர்ந்தவர் காளியப்பன். இவருடைய மனைவி சுமதி (வயது 40). இவர் ஈரோடு பெருந்துறைரோட்டில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் ஊழியராக பணியாற்றி வருகிறார். நேற்று முன்தினம் சுமதி வேலைக்கு செல்வதற்காக ஈரோடு சம்பத்நகர் சின்னமுத்துவீதியில் நடந்து சென்றுகொண்டு இருந்தார். அப்போது அந்த வழியாக ஒரு வாலிபர் மோட்டார் சைக்கிளில் வந்தார். அவர் சுமதி அருகில் சென்றதும் மோட்டார் சைக்கிளை நிறுத்தினார்.
சுமதியின் கழுத்தில் தாலிக்கயிறு மட்டும் இருந்தது. அவர் நகை எதுவும் அணியவில்லை. ஆனால் மோட்டார் சைக்கிளில் வந்தவருக்கு தூரத்தில் இருந்து பார்த்தபோது தாலிக்கயிறு நகைபோல தெரிந்துள்ளது. எனவே அவர் நகை என நினைத்து தாலிக்கயிற்றை பறிக்க முயன்றார். இதைப்பார்த்ததும் சுதாரித்துக்கொண்ட சுமதி தனது கைகளால் அவருடைய கையை தட்டிவிட்டார். உடனடியாக அந்த மர்மநபர் மற்றொரு கையில் மறைத்து வைத்திருந்த மிளகாய்பொடியை சுமதியின் முகத்தில் தூவினார்.
அதன்பின்னர் கீழே விழுந்த சுமதியின் கழுத்தை அவர் பார்த்தபோது, நகை அணியாமல் இருந்ததை தெரிந்துகொண்டார். இதைத்தொடர்ந்து ஏமாற்றத்துடன் அவர் அங்கிருந்து மோட்டார் சைக்கிளில் தப்பிச்சென்றார். இதையடுத்து அந்த வழியாக வந்தவர்கள் சுமதியை மீட்டனர்.
இதுபற்றிய தகவல் கிடைத்ததும் ஈரோடு வீரப்பன்சத்திரம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள். மேலும், சுமதியிடம் கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட மர்மநபரையும் போலீசார் தேடி வருகிறார்கள்.
ஈரோட்டில் பட்டப்பகலில் பெண்ணின் முகத்தில் மிளகாய் பொடி தூவி கொள்ளை முயற்சியில் திருடன் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Related Tags :
Next Story