வெறிநாய் கடித்ததில் 40 ஆடுகள் சாவு
மேல்மருவத்தூர் அருகே வெறிநாய் கடித்ததில் 40 ஆடுகள் பரிதாபமாக இறந்தன.
மதுராந்தகம்,
காஞ்சீபுரம் மாவட்டம் மேல்மருவத்தூர் அடுத்த சிறுமயிலூரை சேர்ந்தவர் அய்யாசாமி (வயது 42). இவருக்கு சொந்தமாக 70 செம்மறி ஆடுகள் உள்ளன. இவர் நேற்று முன்தினம் ஆடுகளை மேய்த்து விட்டு வீட்டின் அருகே உள்ள பட்டியில் அடைத்தார். நேற்று காலை எழுந்து பார்த்த போது ஆடுகளை வெறிநாய் கடித்து குதறி இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். ஆடுகள் ஒன்றன் பின் ஒன்றாக இறந்தன. இதில் மொத்தம் 40 ஆடுகள் இறந்தன.
இது குறித்து அய்யாசாமி சூனாம்பேடு போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆடுகளை கடித்த வெறிநாயை பொதுமக்கள் அடித்துக்கொன்றனர். ஆடுகள் இறந்த தகவல் அறிந்த மதுராந்தகம் கால்நடை மருத்துவர்கள் சிறுமயிலூர் கிராமத்திற்கு விரைந்து சென்று ஆடுகளை பிரேத பரிசோதனை செய்தனர்.

Related Tags :
Next Story