ஈரோடு மண்டல தி.மு.க. மாநாடு இன்று தொடங்குகிறது: மு.க.ஸ்டாலின் நாளை பேசுகிறார்
லட்சக்கணக்கான தொண்டர்கள் பங்கேற்கும் ஈரோடு மண்டல தி.மு.க. மாநாடு பெருந்துறை அருகே சரளையில் இன்று தொடங்கி 2 நாட்கள் நடக்கிறது. இதில் நாளை மு.க.ஸ்டாலின் பேசுகிறார்.
ஈரோடு,
ஈரோடு மண்டல தி.மு.க. மாநாடு பெருந்துறை அருகே உள்ள சரளையில் இன்று (சனிக்கிழமை) காலை 9 மணிக்கு தொடங்குகிறது. இதற்காக பிரம்மாண்ட பந்தல் அமைக்கப்பட்டுள்ளது. பந்தலில் 2 லட்சம் தொண்டர்கள் அமரும் வகையில் இருக்கைகள் போடப்பட்டு உள்ளன.
2 நாட்கள் நடைபெறும் இந்த மாநாடு ஏ.கே.பழனிவேல் குழுவினரின் இசை நிகழ்ச்சியுடன் தொடங்குகிறது. காலை 10 மணிக்கு கோவி.செழியன் எம்.எல்.ஏ. கட்சிக்கொடியை ஏற்றி வைத்து பேசுகிறார். இதனைத்தொடர்ந்து மாநாட்டு வரவேற்புக்குழு தலைவரும், ஈரோடு தெற்கு மாவட்ட செயலாளருமான சு.முத்துசாமி வரவேற்று பேசுகிறார்.
பகல் 11.45 மணிக்கு மாநாட்டு தலைவரும், தி.மு.க. துணை பொதுச்செயலாளருமான சுப்புலட்சுமி ஜெகதீசன் பேசுகிறார்.
நிகழ்ச்சியில் மதியம் 12.30 மணிக்கு திருச்சி சிவா எம்.பி. பேசுகிறார். இரவு 9 மணிக்கு சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத்தலைவரும், கட்சியின் முதன்மை செயலாளருமான துரைமுருகன் கலந்துகொண்டு பேசுகிறார்.
அதன் பின்னர் 2-வது நாள் மாநாட்டு நிகழ்ச்சி நாளை (ஞாயிற்றுக்கிழமை) காலை 9 மணிக்கு இறையன்பன் குத்தூஸ் குழுவினரின் இசை நிகழ்ச்சியுடன் தொடங்குகிறது. மதியம் 12.30 மணிக்கு திண்டுக்கல் ஐ.லியோனி கலந்துகொண்டு உரையாற்றுகிறார்.
மாலை 4 மணிக்கு மாநாட்டு தீர்மானங்கள் நிறைவேற்றப்படுகின்றன. இதனைத்தொடர்ந்து பேச்சாளர்கள் பேசுகிறார்கள். பின்னர் இரவு 8 மணிக்கு கட்சியின் பொதுச்செயலாளர் அன்பழகன் உரை நிகழ்த்துகிறார். அவரைத்தொடர்ந்து 8.30 மணிக்கு சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவரும், தி.மு.க. செயல் தலைவருமான மு.க.ஸ்டாலின் சிறப்புரையாற்றுகிறார்.
இந்த மாநாட்டை தொடர்ந்து நாளை மறுநாள் (திங்கட்கிழமை) மாநாட்டு மேடையில் 110 ஜோடிகளுக்கு செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் இலவச திருமணத்தை நடத்தி வைக்கிறார்.

Related Tags :
Next Story