தனியார் பள்ளிகளின் கல்விக்கட்டணம்: ஏப்ரல் 30-ந்தேதிக்குள் இணையதளத்தில் வெளியிட வேண்டும், மதுரை ஐகோர்ட்டு உத்தரவு
தனியார் பள்ளிகளுக்கான கல்விக் கட்டணத்தை ஏப்ரல் 30-ந்தேதிக்குள் நிர்ணயம் செய்து இணையதளத்தில் வெளியிட வேண்டும் என்று மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
மதுரை,
மதுரை கீழவெளிவீதியைச் சேர்ந்தவரும், மக்கள் விழிப்புணர்வு அறக்கட்டளை நிறுவனருமான கே.ஹக்கீம், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-
தமிழகத்தில் தனியார் பள்ளிகளில் மாணவர்களிடம் வசூலிக்க வேண்டிய கல்விக் கட்டணம் நிர்ணயம் செய்வதற்கு குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுவின் தலைவராக நீதிபதி எம்.சிங்காரவேலு இருந்தார். அப்போது 2017-2018 கல்வி ஆண்டுக்கான கட்டணம் அறிவிக்கப்பட்டது. 2018-ம் ஆண்டு முதல் 2021 வரையிலான கல்வி ஆண்டுகளுக்கான கட்டணம் இதுவரை அறிவிக்கப்படவில்லை.
தமிழகத்தில் 7,600 தனியார் நர்சரி, தொடக்கப்பள்ளிகள், மெட்ரிக் பள்ளிகள் உள்ளன. பெரும்பாலான பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை இப்போது இருந்து தொடங்கிவிட்டனர். நடப்பு கல்வி ஆண்டுக்கான கல்விக் கட்டணம் இன்னும் அறிவிக்கப்படாததால் தனியார் பள்ளி நிர்வாகங்கள் மாணவர்களிடம் இஷ்டத்துக்கு கட்டணம் வசூல் செய்வதில் ஈடுபட்டு வருகின்றன. கல்விக் கட்டணம் வசூலிப்பதில் வெளிப்படைத்தன்மையை பள்ளி நிர்வாகங்கள் கடைபிடிப்பதில்லை.
ஜூன் முதல் வாரத்தில் அனைத்து பள்ளிகளும் திறக்கப்பட்டுவிடும். ஆனால் இதுவரை கல்விக் கட்டண விவரம் அறிவிக்கப்படாமல் உள்ளது. இதனால் மாணவர்களும், பெற்றோர்களும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். எனவே 2018 முதல் 2021 வரையிலான கல்விக் கட்டணம் அறிவிக்கும் வரை தனியார் பள்ளிகளில் மாணவர் சேர்க்கைக்கு தடை விதிக்க வேண்டும். 2018-2021 ஆண்டுகளுக்கான கல்விக் கட்டணத்தை வெளிப்படையாக அறிவிக்க தனியார் பள்ளி கல்விக் கட்டணக் குழுவுக்கு உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டு இருந்தது.
இந்த வழக்கு தலைமை நீதிபதி இந்திராபானர்ஜி, நீதிபதி ராஜமாணிக்கம் ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது, அரசு தரப்பில் ஆஜரான வக்கீல், தமிழகத்தில் 10 ஆயிரம் தனியார் பள்ளிகள் உள்ளன. இதில் 5,500 பள்ளிகளுக்கான கல்விக் கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 4,500 பள்ளிகளுக்கான கல்விக் கட்டணம் நிர்ணயம் செய்யும் பணிகள் நடந்து வருகின்றன“ என்று வாதாடினார்.
விசாரணை முடிவில், தனியார் பள்ளிகளுக்கான கல்விக் கட்டணத்தை நிர்ணயம் செய்து ஏப்ரல் 30-ந்தேதிக்குள் தமிழக அரசின் இணையதளத்தில் வெளியிட வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Related Tags :
Next Story