குரங்கணி தீ விபத்தில் காயம் அடைந்து மதுரையில் சிகிச்சை பெற்று வந்த தஞ்சை பெண் பரிதாப சாவு
தீ விபத்தில் காயம் அடைந்து மதுரையில் சிகிச்சை பெற்று வந்த தஞ்சை பெண்ணின் இறுதிச்சடங்கு நாளை நடக்கிறது.
தஞ்சாவூர்,
குரங்கணி தீ விபத்தில் காயம் அடைந்து மதுரையில் சிகிச்சை பெற்று வந்த தஞ்சையை சேர்ந்த பெண் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். அவரது உடல் தஞ்சைக்கு வந்தது. அவரது இறுதிச்சடங்கு நாளை(ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது.
தேனி மாவட்டம் போடியை அடுத்த குரங்கணி காட்டுப்பகுதியில் கடந்த 11-ந் தேதி தீப்பிடித்தது. இதில் மலையேற்ற பயிற்சிக்கு சென்ற 36 பேர் சிக்கிக் கொண்டனர். இவர்களில் பலர் உயிருடன் மீட்கப்பட்டனர். 9 பேர் சம்பவ இடத்திலேயே பிணமானார்கள். தீக்காயம் அடைந்தவர்கள், மதுரை, கோவை, சென்னை மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டனர். இவர்களில் 9 பேர் அடுத்தடுத்து இறந்து போனார்கள்.
இந்த நிலையில் மதுரை தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த தஞ்சை சாய்வசுமதி(வயது 26), சென்னை நங்கநல்லூர் நிவ்யபிரக்ருதி(23) ஆகியோர் நேற்று சிகிச்சை பலனின்றி இறந்து விட்டனர். இதையடுத்து, குரங்கணி காட்டுத் தீயில் இறந்தவர்கள் எண்ணிக்கை 20 ஆக உயர்ந்தது.
இறந்த சாய்வசுமதி தஞ்சை நாஞ்சிக்கோட்டை சாலை வெங்கடேசா நகரை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி- செல்வி தம்பதியரின் ஒரே மகள் ஆவார். சாய்வசுமதியுடன் உடன் பிறந்தவர்கள் இரண்டு சகோதரர்கள். ஒருவர் பட்டாபிராமன், மற்றொருவர் லட்சுமணன். கிருஷ்ணமூர்த்தி தஞ்சையை அடுத்த பூண்டியில் உள்ள தனியார் கல்லூரியில் முதல்வராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். ஓய்வுக்கு பிறகும் அதே கல்லூரியில் இயற்பியல் துறையில் கவுரவ பேராசிரியராக பணியாற்றி வருகிறார்.
தஞ்சையை அடுத்த சாஸ்த்ரா பல்கலைக்கழகத்தில் எம்.சி.ஏ. படித்து முடித்த சாய்வசுமதி, சென்னையில் உள்ள ஐ.டி. நிறுவனத்தில் கடந்த 2 ஆண்டுகளாக வேலை பார்த்து வந்தார். தேனி மாவட்டம் குரங்கணி மலைப்பகுதியில் மலையேற்ற பயிற்சிக்கு சென்னையில் இருந்து சென்ற குழுவில் தனது தோழிகளுடன் சாய்வசுமதியும் இடம் பெற்றிருந்தார். மலைப்பகுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் இவருக்கு 56 சதவீத தீக்காயம் ஏற்பட்டு இருந்தது. இதற்காக மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அவர் சேர்க்கப்பட்டார். பின்னர் அங்கிருந்து தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட சாய்வசுமதிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
சாய்வசுமதியின் பெற்றோர் அவரை அருகில் இருந்து கவனித்து வந்தனர். இந்த நிலையில் நேற்று அதிகாலை சிகிச்சை பலனின்றி சாய்வசுமதி பரிதாபமாக இறந்தார். பின்னர் அவரது உடல் மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு பிரேத பரிசோதனை நடைபெற்றது. பிரேத பரிசோதனை முடிந்தவுடன் ஆம்புலன்ஸ் மூலம் சாய்வசுமதி உடல் நேற்று பிற்பகல் தஞ்சைக்கு கொண்டு வரப்பட்டது. அங்கு அவரது உடல் வெங்கடேசா நகரில் உள்ள சொந்த வீட்டில் பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. உறவினர்கள், சக தோழிகள், பொதுமக்கள் பலர் வந்திருந்து அஞ்சலி செலுத்தினர்.
சாய்வசுமதியின் அண்ணன் பட்டாபிராமன், சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். அவர் சகோதரியின் மறைவு செய்தியை கேட்டவுடன் தஞ்சைக்கு குடும்பத்தினருடன் வந்து விட்டார். மற்றொரு அண்ணனான என்ஜினீயர் லட்சுமணன் அமெரிக்காவில் வேலை பார்த்து வருகிறார். அவர் சகோதரி மறைந்த செய்தியை அறிந்து சொந்த ஊருக்கு புறப்பட்டு வருகிறார்.
நாளை(ஞாயிற்றுக்கிழமை) சாய்வசுமதியின் இறுதி சடங்கு நடக்கிறது. பாசமாக வளர்த்த ஒரே மகளை இழந்த அவரது பெற்றோர் கதறி அழுதனர். அவர்களுக்கு உறவினர்கள் ஆறுதல் கூறினர்.

Related Tags :
Next Story