புதுவையில் பட்டப்பகலில் ஜாமீனில் வந்த வாலிபர் ஓடஓட விரட்டி வெட்டிக்கொலை
புதுவை வழுதாவூர் சாலையில் பட்டப்பகலில் 5 பேர் கொண்ட கும்பலால் ஒரு வாலிபர் ஓடஓட விரட்டி வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.
புதுச்சேரி,
புதுவை கதிர்காமம் காந்திநகர் வழுதாவூர் சாலையில் நேற்று பகல் 2-30 மணி அளவில் மோட்டார் சைக்கிளில் வாலிபர் ஒருவர் வந்து கொண்டிருந்தார். அவரை பின்தொடர்ந்து 3 மோட்டார் சைக்கிள்களில் வந்த 5 பேர் கொண்ட கும்பல் முன்னால் சென்ற வாலிபரை அரிவாள், கத்தி போன்ற ஆயுதங்களால் வெட்டினார்கள்.
இதில் நிலைக்குலைந்த அந்த வாலிபர் மோட்டார் சைக்கிளில் இருந்து நடுரோட்டில் விழுந்தார். பின்னர் அந்த கும்பலிடம் இருந்து தப்பிக்க எழுந்து ஓடினார். ஆனால் அந்த கும்பலைச் சேர்ந்தவர்கள் வாலிபரை ஓட ஓட துரத்திச்சென்று சுற்றி வளைத்து சரமாரியாக தலை மற்றும் கழுத்து பகுதியில் வெட்டினார்கள். இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்த அந்த வாலிபர் துடிதுடித்து உயிரிழந்தார். பின்னர் அந்த கொலைக்கும்பல் அங்கிருந்து மோட்டார் சைக்கிளில் தப்பிச்சென்றுவிட்டது.
பட்டப்பகலில் நடந்த இந்த கொடூர கொலை சம்பவம் அந்த பகுதியில் இருந்தவர்களை அதிர்ச்சியடைய வைத்தது. அவர்கள் அலறியடித்துக்கொண்டு நாலாபுறமும் சிதறி ஓடினார்கள். வழுதாவூர் சாலையில் வந்த மோட்டார் சைக்கிள்கள், கார்களில் வந்தவர்கள் அப்படியே திரும்பிச்சென்றனர். கொலை நடந்தவுடன் அந்த பகுதியில் உள்ள கடைகள் அடைக்கப்பட்டன. இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
தகவல் அறிந்ததும் கோரிமேடு போலீஸ் இன்ஸ்பெக்டர் கண்ணன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீவிர விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் கொலை செய்யப்பட்ட வாலிபர் திலாசுபேட்டை கருணாஜோதி நகரை சேர்ந்த ஜாக்கி என்கிற சரவணன் (வயது 19) என்பது தெரியவந்தது. இவர்மீது வழிப்பறி, ஆயுதம் வைத்திருத்தல் உள்பட பல்வேறு வழக்குகள் உள்ளன. இவர் மீது கோரிமேடு போலீஸ் நிலையத்தில் ஆயுதம் வைத்திருந்ததாக வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கில் சமீபத்தில்தான் நிபந்தனை ஜாமீனில் சரவணன் வெளியே வந்தார். கோர்ட்டு உத்தரவின்பேரில் தினமும் காலை, மாலையில் கோரிமேடு போலீஸ் நிலையத்தில் அவர் கையெழுத்திட்டு வந்ததும் தெரியவந்தது. சரவணனின் உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக புதுவை கதிர்காமம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இதுபற்றி அறிந்தவுடன் புதுவை சட்டம்-ஒழுங்கு போலீஸ் டி.ஐ.ஜி. ராஜீவ் ரஞ்சன், வடக்குப்பகுதி போலீஸ் சூப்பிரண்டு ரச்சனாசிங் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினார்கள். மேலும் சிறப்பு அதிரடிப்படை போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் கார்த்திகேயன், லாஸ்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் நாகராஜ், மேட்டுப்பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் தங்கமணி மற்றும் சப்-இன்ஸ்பெக்டர்கள் கலைச்செல்வன், ரமேஷ் மற்றும் போலீசார் விசாரணை நடத்தினார்கள்.

Related Tags :
Next Story