சேலத்தில் குறைதீர்க்கும் நாள் கூட்டம்: தலைவாசல் காய்கறி மார்க்கெட்டை மாற்ற விவசாயிகள் எதிர்ப்பு
சேலத்தில் நடந்த குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் தலைவாசல் காய்கறி மார்க்கெட்டை மாற்ற விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
சேலம்,
சேலம் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு கலெக்டர் ரோகிணி தலைமை தாங்கினார். இந்த கூட்டத்தில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து விவசாயிகள் கலந்து கொண்டு தங்களுடைய கோரிக்கைகளை தெரிவித்தனர்.
கூட்டத்தில் விவசாயிகள் பேசியதாவது:-
வெளி மார்க்கெட்டுகளில் விற்பனை செய்யப்படும் சிறுதானியங்கள் தரமற்றது ஆகும். இதனை கண்டறிந்து அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசு அலுவலகங்களுக்கு சென்று வேளாண்மை திட்டங்கள் குறித்து கேட்டால், அதற்கு அங்கிருக்கும் அதிகாரிகள் சரியான பதில் கூற மறுக்கிறார்கள். இதுகுறித்து மேல் அதிகாரிகளிடம் தெரிவிப்போம் என்று கூறினால், நலத்திட்டம் உங்களுக்கு கிடைக்காது என்று மிரட்டுகின்றனர்.
மலைவாழ் மக்களின் நலனை கருத்தில் கொண்டு வன உரிமை சட்டத்தை அமல்படுத்த வேண்டும். கோடை காலத்தில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே மாவட்டம் முழுவதும் முறைகேடான குடிநீர் இணைப்புகளை துண்டிக்க வேண்டும் என அவர்கள் கூறினர்.
பின்னர் தலைவாசல் காய்கறி மார்க்கெட் குறித்து விவசாயிகளும், அதிகாரிகளும் விவாதித்தனர். அப்போது விவசாயிகள் ‘தலைவாசல் காய்கறி மார்க்கெட் தேசிய நெடுஞ்சாலையையொட்டி உள்ளதால் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகிறது‘ என்றனர்.
அதற்கு பதில் அளித்த அதிகாரிகள், தேவியாக்குறிச்சி பகுதியில் அரசு நிலம் இருப்பதால் இந்த மார்க்கெட்டை அங்கு கொண்டு செல்லலாம் என்ற கருத்து உள்ளது என்றனர். இதற்கு விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் பல விவசாயிகள் எழுந்து நின்று மார்க்கெட்டை வேறு இடத்துக்கு மாற்ற கூடாது என்றும் அதை மேம்படுத்த வேண்டும் என்று கலெக்டரிடம் கோரிக்கை விடுத்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
கூட்டத்தில் தொடர்ந்து விவசாயிகள் பேசும் போது, ‘காய்கறிகளை அரசு டவுன் பஸ்களில் இலவசமாக கொண்டு செல்ல அனுமதி பெற்று தரவேண்டும். தலைவாசல் பகுதியில் வேளாண்மை கல்லூரி ஒன்று தொடங்க வேண்டும். கூட்டுறவு சங்க தேர்தல் நேர்மையாக நடத்த வேண்டும். முத்தரப்பு கூட்டம் நடத்திய பின்னரும் மரவள்ளி கிழங்கிற்கு உரிய விலை கிடைப்பதில்லை. மாவட்டத்தில் சந்துகளில் உள்ள மதுக்கடைகளை உடனே அகற்ற வேண்டும்‘ என்று பேசினர். விவசாயிகள் கோரிக்கைகள் தொடர்பாக பரிசீலித்து விரைவில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கலெக்டர் ரோகிணி கூறினார். இந்த கூட்டத்தில் வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண்மை வணிகத்துறையின் கீழ் செயல்படுத்தப்படும் திட்டங்களும், அவற்றை பெறுவதற்கான வழிமுறைகளும் குறித்த கையேடுகளை கலெக்டர் ரோகிணி வெளியிட்டார். மேலும் விவசாயிகளுக்கு விவசாய உபகரணங்களை கலெக்டர் வழங்கினார். இந்த கூட்டத்தில் இயற்கை முறையில் விளைவித்த காய்கறிகளை விவசாயிகள் கலெக்டரிடம் காண்பித்தனர்.

Related Tags :
Next Story