கட்டணம் வசூல் செய்வதற்கான ஏலம் ‘திடீர்’ ஒத்திவைப்பு
திருவண்ணாமலை நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் வாகனங்களுக்கான கட்டண வசூல் செய்யும் உரிமைக்கான ஏலத்துக்கு ஒப்பந்தப்புள்ளி வழங்க வந்தவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் ஏலம் ஒத்திவைக்கப்பட்டது.
திருவண்ணாமலை,
திருவண்ணாமலை மத்திய பஸ் நிலையத்தில் ஒலிபெருக்கி மூலம் விளம்பரம் செய்யும் உரிமை, பஸ் நிலையத்தின் தென்புறம் அமைக்கப்பட்டு உள்ள மிதி வண்டி மற்றும் மோட்டார் சைக்கிள் பாதுகாப்பகத்திற்கு கட்டணம் வசூலிக்கும் உரிமை, நகராட்சி எல்லைக்குள் வரும் சுற்றுலா மோட்டார் வாகனங்களுக்கு கட்டணம் வசூலிக்கும் உரிமை (கார்த்திகை தீப விழா நாட்கள் நீங்கலாக), சாலையோர தற்காலிக கடைகளில் கட்டணம் வசூலித்துக் கொள்ளும் உரிமை (கார்த்திகை தீப விழா நாட்கள் நீங்கலாக), முத்து விநாயகர் கோவில் தெருவில் உள்ள டி.எம்.சி. தங்கும் விடுதி மற்றும் நகர் நல அலுவலர் குடியிருப்பு சுற்றுச்சுவரை ஒட்டியுள்ள இருச்சக்கர வாகனம் நிறுத்துமிடத்தில் கட்டணம் வசூல் செய்தல் ஆகியவைகளுக்கு ஏலம் விடப்படும் நகராட்சி அறிவித்திருந்தது. இந்த ஏலம் நேற்று நடைபெறும் எனவும், சம்பந்தப்பட்டவர்களிடம் காலை 10 மணி முதல் 11.30 வரை மூடி முத்திரையிட்ட ஒப்பந்தப்புள்ளிகள் பெற்றுக் கொள்ளப்படும் என்று நகராட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.
இந்த நிலையில் மேற்கண்ட இனங்களை ஏலம் எடுக்க வந்தவர்கள் ஒப்பந்தப்புள்ளியை கொடுப்பதற்கு முண்டியடித்தபோது ஒருவரை ஒருவர் செல்லவிடாமல் தடுத்து கொண்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் நகராட்சி அலுவலகம் பரபரப்பாக காணப்பட்டது.
அப்போது, ஒருவர் தன்னை சிலர் ஏலம் எடுக்கவிடாமல் தடுக்கின்றனர். “ஏலம் எடுக்க வேண்டும் என்றால் எங்களுக்கு குறிப்பிட்ட சதவீதம் பணம் தர கேட்டு மிரட்டுகின்றனர்” என்று பத்திரிகையாளர்களிடம் கூறினார். இதையடுத்து அவருடன் வந்தவர்கள் அவரை அழைத்து சென்றனர். இதனால் அங்கு மேலும் பரபரப்பு ஏற்பட்டது.
இதுகுறித்து நகராட்சி ஆணையாளர் பாரிஜாதம் கூறுகையில், ‘11.30 மணிவரை ஏலத்திற்கான ஒப்பந்தப்புள்ளி யாரும் வழங்காததால் ஏலம் ஒத்தி வைக்கப்பட்டது’ என்றார்.

Related Tags :
Next Story