நைஸ் நிறுவனத்தால் பெங்களூரு மாநகராட்சிக்கு ரூ.50 கோடி இழப்பு
நைஸ் நிறுவனத்தால் பெங்களூரு மாநகராட்சிக்கு ரூ.50 கோடி இழப்பு ஏற்பட்டு உள்ளதாக மாநகராட்சி கூட்டத்தில் பா.ஜனதா குற்றம்சாட்டியது.
பெங்களூரு,
பெங்களூரு மாநகராட்சி கூட்டம் அதன் தலைமை அலுவலகத்தில் உள்ள கூட்ட அரங்கத்தில் நேற்று நடைபெற்றது. மேயர் சம்பத்ராஜ் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் கவுன்சிலர்கள் மற்றும் அதிகாரிகள் கலந்துகொண்டனர். கூட்டம் தொடங்கியதும் எதிர்க்கட்சி தலைவர் (பா.ஜனதா) பத்மநாபரெட்டி எழுந்து பேசியதாவது:-
நைஸ் நிறுவனத்திற்கு மாநில அரசு 2,173 ஏக்கர் நிலத்தை ஒரு ஏக்கருக்கு ஒரு ரூபாய் என்ற விலையில் வழங்கியது. சாலை அமைத்த அந்த நிறுவனம் வாகனங்களிடம் சுங்க கட்டணம் வசூலிக்கிறது. ஒசகெரேஹள்ளியில் அந்த நைஸ் நிறுவனம் இணைப்பு சாலை அமைக்கிறது. இதற்காக 55 ஆயிரத்து 180 அடி நிலம் கையகப்படுத்தப்பட்டது.
இதற்காக மாநகராட்சி சார்பில் அந்த நைஸ் நிறுவனத்திற்கு 83 ஆயிரத்து 640 அடி நிலம் வழங்கப்பட்டது. அந்த நிலம் வேறு ஒரு நிறுவனத்திற்கு விற்பனை செய்யப்பட்டது. இதற்கு பட்டா கேட்டு விண்ணப்பிக்கும்போது முறைகேடு நடந்தது பகிரங்கமானது. நைஸ் நிறுவனத்தால் மாநகராட்சிக்கு ரூ.50 கோடி இழப்பு ஏற்பட்டது.
ராஜராஜேஸ்வரிநகர் தொகுதியில் இந்த முறைகேடு நடந்துள்ளது. இதற்கு நாங்கள் போராட்டம் நடத்துவோம். எந்த முதலீடும் செய்யாமல் கோடிக்கணக்கான ரூபாயை நைஸ் நிறுவனம் ஈட்டியுள்ளது. மேலும் அந்த நிறுவனம் மாநகராட்சியையும் ஏமாற்றியுள்ளது. இதன் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு பத்மநாபரெட்டி பேசினார்.

Related Tags :
Next Story