அ.தி.மு.க. அமைப்பு செயலாளராக நியமனம்: அண்ணா, எம்.ஜி.ஆர். சிலைக்கு மனோஜ் பாண்டியன் மாலை அணிவிப்பு
அ.தி.மு.க. அமைப்பு செயலாளராக நியமனம் செய்யப்பட்ட மனோஜ் பாண்டியன் நெல்லையில் அண்ணா, எம்.ஜி.ஆர். சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
நெல்லை,
அ.தி.மு.க. அமைப்பு செயலாளராக நியமனம் செய்யப்பட்ட மனோஜ் பாண்டியன் நெல்லையில் அண்ணா, எம்.ஜி.ஆர். சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அவருக்கு தொண்டர்கள் உற்சாக வரவேற்பு கொடுத்தனர்.
தலைவர்கள் சிலைக்கு மாலை
அ.தி.மு.க. மாநில அமைப்பு செயலாளராக முன்னாள் எம்.பி. மனோஜ் பாண்டியன் நியமிக்கப்பட்டார். அவர் நேற்று சென்னையில் இருந்து விமானம் மூலம் தூத்துக்குடி விமான நிலையம் வந்தார். அங்கு அவருக்கு உற்சாக வரவேற்பு கொடுக்கப்பட்டது. பின்னர் அவர் கார் மூலம் நெல்லை வந்தார். வரும் வழியில் தொண்டர்கள் வரவேற்பு கொடுத்தனர்.
நெல்லை கொக்கிரகுளத்தில் உள்ள எம்.ஜி.ஆர். சிலைக்கு மனோஜ் பாண்டியன் மாலை அணிவித்தார். அங்கு அலங்கரிக்கப்பட்டு இருந்த மறைந்த முதல்–அமைச்சர் ஜெயலலிதா படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:–
நன்றி
என்னை அமைப்பு செயலாளராக நியமனம் செய்த அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம், இணை ஒருங்கிணைப்பாளரும், முதல்–அமைச்சருமான எடப்பாடி பழனிசாமி ஆகியோருக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறேன். எம்.ஜி.ஆர். தொடங்கிய இந்த இயக்கம் மறைந்த முதல்–அமைச்சர் ஜெயலலிதாவின் வழிகாட்டுதலின் படி இந்த அரசு சிறப்பாக செயல்பட்டு வருகிறது.
டெல்லி கோர்ட்டு 20 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் செல்லாது என அறிவித்துள்ளது. ஆனால் தமிழகத்தின் நிலைமை வேறு. 18 எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்து சபாநாயகர் உத்தரவிட்டுள்ளார். சபாநாயகர் தீர்ப்பு நியாயமாக இருக்கும். பொறுத்து இருந்து பார்ப்போம். இந்த ஆட்சி 5 ஆண்டுகள் முழுமையாக பூர்த்தி செய்யும். மறைந்த முதல்–அமைச்சர் ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை கமிஷன் யாருக்காக அமைக்கப்பட்டது என்பது எல்லோருக்கும் தெரியும். உண்மையான குற்றவாளிகள் விரைவில் தண்டிக்கப்படுவார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
பின்னர் அவர், நெல்லை சந்திப்பு ஈரடுக்கு மேம்பாலம் பகுதியில் உள்ள அண்ணா சிலைக்கு மாலை அணிவித்தார். தூத்துக்குடியில் இருந்து நெல்லை வரை ஆங்காங்கே மனோஜ் பாண்டியனுக்கு வரவேற்பு கொடுக்கப்பட்டது.
அமைச்சர், எம்.பி.–எம்.எல்.ஏ.
இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் ராஜலட்சுமி, நெல்லை புறநகர் மாவட்ட செயலாளர் கே.ஆர்.பி.பிரபாகரன் எம்.பி., அமைப்பு செயலாளர் சுதா பரமசிவன், செல்வமோகன்தாஸ் பாண்டியன் எம்.எல்.ஏ., மாநில இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை இணை செயலாளர் என்.சின்னத்துரை, புறநகர் மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளர் இ.நடராஜன், மாவட்ட ஜெயலலிதா பேரவை தலைவர் ஏ.கே.சீனிவாசன், நாங்குநேரி முன்னாள் சட்டமன்ற அ.தி.மு.க. செயலாளர் ஆர்.எஸ்.முருகன், சிறுபான்மை பிரிவு செயலாளர் காபிரியேல்ராஜன், சிறுபான்மை பிரிவு இணை செயலாளர் சி.டென்சிங் சுவாமிதாஸ்,
நெல்லை மாநகர் மாவட்ட பொருளாளர் தச்சை கணேசராஜா, பணகுடி முன்னாள் நகர பஞ்சாயத்து தலைவர் ஜி.டி.லாரன்ஸ், நெல்லை திருமண்டல லே செயலாளர் டி.வேதநாயகம், பொறுப்பு தலைவர் ஏ.எச்.எல்.பில்லி, குருத்துவ காரியதரிசி ஸ்டீபன் செல்வின்ராஜ், முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் ரெட்டியார்பட்டி நாராயணன், முன்னாள் பஞ்சாயத்து தலைவர்கள் ஜி.என்.அந்தோணிராஜ், முத்துக்குட்டி பாண்டியன், கொத்தன்குளம் இளைஞர் பாசறை செயலாளர் பரமகுரு நாராயணன், இட்டமொழி கூட்டுறவு முன்னாள் துணை தலைவர் என்.சிங்கராஜ், சேரன்மாதேவி ஒன்றிய செயலாளர் கருத்தப்பாண்டி, துணை செயலாளர் எ.கணபதி, கண்டிகைபேரி ஜான்சன், இ.எம்.மனோஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
மனோஜ் பாண்டியன் வருகையையொட்டி நெல்லை மாநகர பகுதியில் பல இடங்களில் அ.தி.மு.க. கொடிகள் மற்றும் வரவேற்பு பேனர்கள் வைக்கப்பட்டு இருந்தன.

Related Tags :
Next Story