நெல்லையில் போக்குவரத்து கழக ஓய்வு பெற்ற தொழிலாளர்கள் போராட்டம்


நெல்லையில் போக்குவரத்து கழக ஓய்வு பெற்ற தொழிலாளர்கள் போராட்டம்
x
தினத்தந்தி 25 March 2018 2:30 AM IST (Updated: 24 March 2018 7:27 PM IST)
t-max-icont-min-icon

நெல்லையில் போக்குவரத்து கழக ஓய்வு பெற்ற தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நெல்லை,

நெல்லையில் போக்குவரத்து கழக ஓய்வு பெற்ற தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தர்ணா போராட்டம்


தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக ஓய்வு பெற்ற தொழிலாளர் நலச்சங்கம் (ஏ.ஐ.டி.யு.சி) சார்பில் நேற்று நெல்லை வண்ணார்பேட்டை அரசு போக்குவரத்து கழக பொது மேலாளர் அலுவலகம் முன்பு வாயிற் கூட்டம் மற்றும் தர்ணா போராட்டம் நடைபெற்றது.

சங்க செயலாளர் ராதாகிருஷ்ணன் தலைமை தாங்கினார். சங்க தலைவர் முத்து, துணை தலைவர் குருசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கோரிக்கைகள்

அரசு போக்குவரத்து கழக ஓய்வூதிய திட்டத்தை தமிழக அரசே பொறுப்பேற்று, ஒவ்வொரு மாதமும் 1–ந் தேதி அன்றே ஓய்வூதியத்தை வழங்க வேண்டும். 28 மாதங்களாக ஓய்வூதியத்துக்கு அகவிலைப்படி உயர்வு வழங்கப்படவில்லை, அகவிலைப்படி உயர்வை நிலுவை தொகையுடன் சேர்த்து வழங்க வேண்டும். ஓய்வூதியர்களுக்கு சமூக பாதுகாப்பு நிதி மற்றும் மருத்துவ காப்பீடு திட்டத்தை ஏற்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடைபெற்றது.

இதில் ஏ.ஐ.டி.யு.சி. மாநில சம்மேளன பொதுச் செயலாளர் லட்சுமணன், மாநில கூட்டமைப்பு செயலாளர் மணி, துணை தலைவர் ஆறுமுகம், ஓய்வு பெற்ற தொழிலாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story