தமிழக அரசின் ஓராண்டு சாதனை விளக்க கண்காட்சி: அமைச்சர் பாஸ்கரன் திறந்துவைத்தார்


தமிழக அரசின் ஓராண்டு சாதனை விளக்க கண்காட்சி: அமைச்சர் பாஸ்கரன் திறந்துவைத்தார்
x
தினத்தந்தி 25 March 2018 3:15 AM IST (Updated: 25 March 2018 12:37 AM IST)
t-max-icont-min-icon

சிவகங்கையில் தமிழக அரசின் ஓராண்டு சாதனை விளக்க கண்காட்சியை அமைச்சர் பாஸ்கரன் திறந்துவைத்தார்.

சிவகங்கை,

சிவகங்கை மாவட்ட செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பில் தமிழக அரசின் ஓராண்டு சாதனை விளக்க கண்காட்சி சிவகங்கையில் நடைபெற்றது. சிவகங்கை சிவன் கோவில் அருகே அமைக்கப்பட்ட கண்காட்சி திறப்பு விழாவிற்கு கலெக்டர் லதா தலைமை தாங்கினார். பி.ஆர்.செந்தில்நாதன் எம்.பி. முன்னிலை வகித்தார். அமைச்சர் பாஸ்கரன் கண்காட்சியினை திறந்துவைத்து, அரசின் ஓராண்டு சாதனை விளக்க கையேட்டை வெளியிட்டார். இந்த கண்காட்சியில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கிய புகைப்படங்கள், முக்கிய நிகழ்வுகள் குறித்த புகைப்படங்கள், அமைச்சர் மற்றும் கலெக்டர் ஆகியோர் மாவட்டத்தில் நடைபெற்ற அரசு விழாக்களில் நலத்திட்ட உதவிகள் வழங்கிய புகைப்படங்கள் இடம்பெற்றிருந்தன. மேலும் இக்கண்காட்சியில் அரசு திட்டங்கள் குறித்தும், நலத்திட்டங்களின் பயன்கள் குறித்தும் ஏராளமான பொதுமக்கள் பார்த்து தெரிந்துகொண்டனர்.

இதனைத்தொடர்ந்து முதல்-அமைச்சரின் சிவகங்கை மாவட்டத்தின் ஓராண்டு சாதனை விளக்க கையேட்டினை அமைச்சர் பாஸ்கரன் பொதுமக்களுக்கு வழங்கினார். பின்னர் வேளாண் பொறியியல் துறையின் மூலம் 7 பயனாளிகளுக்கு ரூ.21 லட்சம் மதிப்பீட்டில் வேளாண் உபகரணங்களை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் வருவாய் அலுவலர் இளங்கோ, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் பாண்டி, சிவகங்கை கோட்டாட்சியர்(பொறுப்பு) ராமபிரதீபன், உதவி மக்கள் தொடர்பு அலுவலர்(செய்தி) கருப்பணராஜவேல் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர். 

Next Story