கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் ஊர்வலம்
ராமநாதபுரத்தில் ஜாக்டோ-ஜியோ அமைப்பின் சார்பில் பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தினை ரத்து செய்வது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஊர்வலம் நடைபெற்றது.
ராமநாதபுரம்,
தன் பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்தல், 21 மாத ஊதிய குழு நிலுவை தொகையை உடனடியாக வழங்க வேண்டும், ஊதியக் குழுவில் உள்ள முரண்பாடுகளை நீக்க வேண்டும் என்பது போன்ற கோரிக்கைகளை வலியுறுத்திராமநாதபுரத்தில் ஜாக்டோ-ஜியோ அமைப்பின் சார்பில் ஊர்வலம் நடைபெற்றது. அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் சேகர் தலைமை தாங்கினார். தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்க மாவட்ட தலைவர் முருகேசன் முன்னிலை வகித்தார். தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி மாநில துணைத்தலைவர் அலெக்சாண்டர் ஊர்வலத்தை தொடங்கி வைத்து பேசினார். நகர்ப்புற நிலவரி உச்ச வரம்பு சங்க தலைவர் பாலாஜி கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார்.
இதில் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்ட செயலாளர் முத்துமுருகன், பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பின் மாவட்ட செயலாளர் நெய்னாமுகம்மது, தமிழக ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்ட செயலாளர் லாரன்ஸ், தமிழ்நாடு உயர்நிலை-மேல்நிலை பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழக மாநில துணை தலைவர் நீலகண்டபூபதி, மேல்நிலைப்பள்ளி முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழக மாவட்ட செயலாளர் தர்மராஜ், தலைமை ஆசிரியர் கழக மாவட்ட செயலாளர் சேகர், அரசு கல்லூரிஆசிரியர் கழக மாவட்ட தலைவர் பாரதி, அனைத்து வள மைய பட்டதாரி ஆசிரியர் முன்னேற்ற சங்க மாவட்ட செயலாளர் திலகராஜன், உயர்நிலை-மேல் நிலைப்பள்ளி கணினி ஆசிரியர் சங்க மாவட்ட செயலாளர் ரவி ஆகியோர் தீர்மானத்தை விளக்கி பேசினார்கள்.
மேலும் அரசு கோரிக்கைகளை ஏற்று நிறைவேற்றாவிட்டால் வருகிற ஏப்ரல் மாதம் 8-ந்தேதி சென்னை கவர்னர் மாளிகையில் முற்றுகை போராட்டம் நடத்தப்படும் என்று முடிவு செய்து அறிவித்தனர். ராமநாதபுரம் புதிய பஸ் நிலையம் அண்ணா சிலை அருகில் இருந்து தொடங்கிய இந்த ஊர்வலம் நகரின் முக்கிய வீதிகள் வழியாக சென்று அரண்மனையை அடைந்தது. ஊர்வலத் தில் ஜாக்டோ- ஜியோ அமைப்பை சேர்ந்த ஏராளமானோர் கலந்துகொண்டனர். முடிவில், தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி மாவட்டச் செயலாளர் லியோஜெரால்டு எமர்சன் நன்றி கூறினார்.

Related Tags :
Next Story