குறிச்சி-குனியமுத்தூர் கூட்டுக்குடிநீர் திட்ட குழாயை உடைத்து தண்ணீர் திருடினால் கடும் நடவடிக்கை, அதிகாரி எச்சரிக்கை


குறிச்சி-குனியமுத்தூர் கூட்டுக்குடிநீர் திட்ட குழாயை உடைத்து தண்ணீர் திருடினால் கடும் நடவடிக்கை, அதிகாரி எச்சரிக்கை
x
தினத்தந்தி 25 March 2018 3:00 AM IST (Updated: 25 March 2018 12:48 AM IST)
t-max-icont-min-icon

குறிச்சி -குனியமுத்தூர் கூட்டுக்குடி நீர்குழாயை உடைத்து தண்ணீர் திருடினால் கடும்நடவடிக்கை எடுக்கப்படும் என்று குடிநீர் வடிகால்வாரிய அதிகாரி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

கிணத்துக்கடவு,

பொள்ளாச்சி அருகே உள்ள ஆத்துப்பொள்ளாச்சியில் இருந்து கிணத்துக்கடவு- குறிச்சி-குனியமுத்தூர் கூட்டுக்குடிநீர்திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இந்த திட்டத்தின் மூலம்ஒருநாளைக்கு 90 லட்சம் லிட்டர்ஆத்துப்பொள்ளாச்சியில் இருந்து குழாய் மூலம் எடுக்கப்பட்டு கிணத்துக்கடவு பேரூராட்சிக்கு 5 லட்சம் லிட்டர் குடிநீரும், குறிச்சிக்கு 45 லட்சம் லிட்டர்குடிநீரும், குனியமுத்தூருக்கு 35 லட்சம் லிட்டர் குடிநீரும் வழங்கப்பட்டுவருகிறது.

இந்த நிலையில் ஆத்துபொள்ளாச்சி முதல் குறிச்சி வரைசெல்லும் பகுதியில் உள்ள குடிநீர் குழாய்களைசில சமூக விரோதிகள் உடைத்து தண்ணீரை பிடித்து வருவதால் 5லட்சம் லிட்டர் குடிநீர் வீணாகிவிடுகிறது என்று கண்டறியப்பட்டுள்ளது. இதில் ஆச்சிப்பட்டியில் இருந்து கிணத்துக்கடவு வரைஉள்ள பகுதிகளில் மட்டும் 6 இடங்களில் அடிக்கடி குழாயை உடைத்து தண்ணீர் திருடப்படுகிறது.

இந்த நிலையில் எந்த பகுதியில் குழாய் உடைப்புகள் ஏற்பட்டுள்ளதோ? அங்கு விரைந்து சென்று உடைப்புகளை உடனே சரிசெய்யும் பணியில் குடிநீர் வடிகால்வாரிய அதிகாரிகள் தீவிர நடவடிக்கை எடுத்துவருகின்றனர். இதுகுறித்து குடிநீர் வடிகால்வாரிய அதிகாரி கூறிய தாவது:-

குறிச்சி-குனியமுத்தூர் கூட்டு குடிநீர்திட்டத்தின்கீழ் வரும் குடிநீர்குழாய் பகுதியில் 150 வால்வுகள் அமைக்கப்பட்டுள்ளன. வால்வுபகுதி அமைந்துள்ள இடத்தில் ஆச்சிபட்டிமுதல் கிணத்துக்கடவு வரை 6 இடங்களில்அடிக்கடி சமூக விரோதிகள் உடைத்து விடுவதால் தினசரி 5லட்சம்லிட்டர் வரை குடிநீர் வீணாகிறது. இந்த குழாய் உடைப்புகளை சரிசெய் வதற்கு மட்டும் ஆண்டுக்கு ரூ.20லட்சம்வரை அரசுக்கு செலவாகிறது. தற்போது வறட்சிகாலம் எந்தபகுதிகளில் குழாய் உடைப்பு உள்ளதோ அவை அனைத்தையும் சரிசெய்யும்நடவடிக்கை எடுக்கப்பட்டுவருகிறது.

குழாய்களை உடைக்கும் சமூகவிரோதிகளை கண்காணிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. குழாய் உடைக்கும் நபர்களைபற்றி தகவல் தெரிந்தால் அந்தநபர்களின்மீது கடும்நடவடிக்கை எடுக்கப்படும். வறட்சிகாலம் என்பதால் பொதுமக்கள்குடிநீரைசிக்கனமாக பயன்படுத்தவேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார். 

Next Story