விபத்தில்லா மாவட்டமாக்க ஒத்துழைக்க வேண்டும், போலீஸ் சூப்பிரண்டு வலியுறுத்தல்
விருதுநகர் மாவட்டத்தை விபத்தில்லா மாவட்டமாக உருவாக்க அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என சாலை பாதுகாப்பு கருத்தரங்கில் பேசிய போலீஸ் சூப்பிரண்டு ராஜராஜன் வலியுறுத்தினார்.
விருதுநகர்,
சிவகாசி அய்யநாடார்- ஜானகிஅம்மாள் பாலிடெக்னிக் கல்லூரியில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது. கல்லூரி முதல்வர் அணிலட்அன்பரசி தலைமையில் நடைபெற்ற இந்த கருத்தரங்கில் கலந்து கொண்டு போலீஸ் சூப்பிரண்டு ராஜராஜன் பேசியதாவது:-
இந்தியாவில் கடந்த ஆண்டு நிகழ்ந்த 15 லட்சம் சாலை விபத்தில் 1½ லட்சம் பேர் இறந்துள்ளனர். இதனால் பல குடும்பங்கள் பாதிக்கப்படுகின்றன. மாணவர்கள் சாலை விதிகளை நன்கு தெரிந்து கொள்ள மாவட்ட போலீஸ் நிர்வாகம் பல்வேறு விழிப்புணர்வு கருத்தரங்குகளை நடத்தி வருகிறது. விருதுநகர் மாவட்டத்தில் கடந்த ஆண்டு விபத்துகள் மூலம் ஏற்படும் மரணங்கள் குறைந்துள்ளன.
இருசக்கர வாகனங்களில் செல்வோர் ஹெல்மெட் அணியாமல் செல்வதால்தான், விபத்துகளில் சிக்கி உயிரிழக்கும் நிலை ஏற்படுகிறது. சாலை விதிமுறைகளை வாகனங்கள் ஓட்டும் போது முறையாக பின்பற்ற வேண்டும். விபத்தில் சிக்கி உயிரிழப்பு ஏற்பட்டால் அதனால் ஏற்படும் பாதிப்பு குறித்து சிந்தித்து வாகனங்களை ஓட்டும் போது மிகுந்த கவனத்துடன் செல்ல வேண்டும். இருசக்கர வாகனங்களில் செல்வோர்கள் ஹெல்மெட்டையும், கார்களில் செல்வோர் சீட்பெல்ட்டுகளையும் அணிந்து செல்ல வேண்டும்.
அனைத்த தரப்பினரும் சாலை விதிகளை பின்பற்றி வாகன விபத்துகளை தவிர்த்து விருதுநகர் மாவட்டத்தை விபத்து இல்லா மாவட்டமாக உருவாக்க ஒத்துழைப்பு தர வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். இந்த கருத்தரங்கில் வட்டார போக்குவரத்து அதிகாரி நடராஜன், போக்குவரத்து பிரிவு இன்ஸ்பெக்டர் குமார், மோட்டார் வாகனஆய்வாளர் கதிர்வேல் ஆகியோர் பேசினர். அப்போது சிவகாசி பகுதியில் கடந்த 3 மாதங்களில் விபத்துகள் ஏதும் இல்லை என்றும், இதற்கு சாலை விழிப்புணர்வுகள் பிரசாரங்கள் பெரிதும் உதவிஉள்ளது என்றும் தெரிவித்தனர். சாலை பாதுகாப்புக்கு உறுப்பினர் அழகுசுந்தரம் வரவேற்றார். கல்லூரி விரிவுரையாளர் சிவக்குமார் நன்றி கூறினார்.

Related Tags :
Next Story