ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் ஊர்வலம்


ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் ஊர்வலம்
x
தினத்தந்தி 25 March 2018 4:00 AM IST (Updated: 25 March 2018 1:09 AM IST)
t-max-icont-min-icon

புதுக்கோட்டையில், ஜாக்டோ-ஜியோ அமைப்பு சார்பில் நேற்று மாலை கோரிக்கைகளை வலியுறுத்தி ஊர்வலம் நடைபெற்றது.

புதுக்கோட்டை,

புதுக்கோட்டையில், ஜாக்டோ-ஜியோ அமைப்பு சார்பில் நேற்று மாலை கோரிக்கைகளை வலியுறுத்தி ஊர்வலம் நடைபெற்றது. ஊர்வலத்திற்கு அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் நாகராஜன், தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்க மாவட்ட செயலாளர் ராஜாங்கம், தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்ற முன்னாள் மாவட்ட பொருளாளர் செல்வராஜ் ஆகியோர் தலைமை தாங்கினர். ஊர்வலம் பழைய பஸ் நிலையம் அருகே உள்ள பொது அலுவலக வளாகத்தில் தொடங்கி, எம்.ஜி.ஆர். சிலை, புதிய பஸ் நிலையம் வழியாக சென்று திலகர் திடலில் நிறைவுபெற்றது. புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து விட்டு, பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். சத்துணவு, அங்கன்வாடி, வருவாய் கிராம உதவியாளர், ஊராட்சி செயலாளர்கள், ஊர்ப்புற நூலகர்கள், பகுதிநேர தொகுப்பூதிய ஆசிரியர்கள் உள்ளிட்டோருக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் என்பன உள்பட 4 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஊர்வலம் நடைபெற்றது. இதில் அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்கள் பலர் கலந்து கொண்டனர். 
1 More update

Next Story