தர்மபுரியில் தமிழக அரசின் ஓராண்டு சாதனை மலர் அமைச்சர் கே.பி.அன்பழகன் வெளியிட்டார்
தர்மபுரியில் தமிழக அரசின் ஓராண்டு சாதனை மலரை அமைச்சர் கே.பி.அன்பழகன் வெளியிட்டார்.
தர்மபுரி,
தர்மபுரி அரசு கலைக்கல்லூரி ஆண்டு விழா கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. விழாவிற்கு கலெக்டர் மலர்விழி தலைமை தாங்கினார். கல்லூரி முதல்வர் கண்ணன் வரவேற்று பேசினார். கல்லூரி கல்வி இணை இயக்குனர் நடராஜன், முதன்மை கல்வி அலுவலர் ராமசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். வரலாற்றுத்துறை தலைவர் சிவகாமி ஆண்டறிக்கை வாசித்தார்.
விழாவில் தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் கலந்து கொண்டு அம்மா வழியில் நல்லாட்சி அதற்கு ஓராண்டு சாதனையே சாட்சி என்ற தலைப்பில் தர்மபுரி மாவட்டத்தில் நிறைவேற்றப்பட்ட திட்டங்களின் ஓராண்டு சாதனை மலரை வெளியிட்டார். பின்னர் பெரியார் பல்கலைக்கழக அளவில் சிறப்பிடம் பெற்ற அரசு கலைக்கல்லூரி படிக்கும் மாணவ, மாணவிகள் 16 பேருக்கும், கல்லூரி அளவில் இளங்கலை மற்றும் முதுகலை பாடப்பிரிவுகளில் முதல் 3 இடங்களை பெற்ற 45 மாணவ, மாணவிகளுக்கும் பாராட்டு சான்றிதழ் மற்றும் பரிசுகளை அமைச்சர் வழங்கினார். மேலும் பள்ளி கல்வித்துறை சார்பில் 10, 12-ம் வகுப்பு படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு ரொக்க பரிசு மற்றும் காமராஜர் விருதுகளை அவர் வழங்கினார்.
உயர்கல்வி
விழாவில் அமைச்சர் கே.பி.அன்பழகன் பேசுகையில், உலக அளவில் பிளஸ்-2 படித்து முடித்து 36 சதவீத மாணவ, மாணவிகள் மட்டுமே உயர்கல்வி பயிலுகின்றனர். இந்திய அளவில் 25.2 சதவீதம் பேர் உயர்கல்வி படிக்கின்றனர். ஆனால் தமிழ்நாட்டில் ஜெயலலிதா அரசு கல்வித்துறையில் மேற்கொண்ட நடவடிக்கையினால் உயர்கல்வி படிப்பவர்களின் எண்ணிக்கை 46.9 சதவீதமாக உயர்ந்துள்ளது. தர்மபுரி மாவட்டத்தில் ஐ.டி.ஐ., பாலிடெக்னிக், கலை அறிவியல் கல்லூரி, பொறியியல் மற்றும் மருத்துவம் என 96.82 சதவீத மாணவ, மாணவிகள் உயர்கல்வி படித்து வருகின்றனர் என்று அவர் கூறினார்.
விழாவில் கூட்டுறவு சங்க தலைவர்கள் பழனிசாமி, கோவிந்தசாமி, சிவப்பிரகாசம், நகர கூட்டுறவு வங்கி தலைவர் குருநாதன், முன்னாள் நகராட்சி கவுன்சிலர் பூக்கடை ரவி, மத்திய கூட்டுறவு வங்கி இயக்குனர் பொன்னுவேல், மாநில கூட்டுறவு பணியாளர் சங்க செயலாளர் சின்.அருள்சாமி மற்றும் பேராசிரியர்கள், மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். முடிவில் கூட்டுறவு துறை தலைவர் ராஜேந்திரன் நன்றி கூறினார்.

Related Tags :
Next Story