மின்திருட்டில் ஈடுபட்டவர்களிடம் இருந்து ரூ.1 கோடியே 95 லட்சம் அபராதம் வசூல்


மின்திருட்டில் ஈடுபட்டவர்களிடம் இருந்து ரூ.1 கோடியே 95 லட்சம் அபராதம் வசூல்
x
தினத்தந்தி 25 March 2018 5:03 AM IST (Updated: 25 March 2018 5:03 AM IST)
t-max-icont-min-icon

மின்திருட்டில் ஈடுபட்டவர்களிடம் இருந்து ரூ.1 கோடியே 95 லட்சம் அபராதம் வசூல் செய்யப்பட்டுள்ளதாக அதிகாரி கூறினார்.

மும்பை,

மராட்டிய மாநில மின் பகிர்மான நிறுவனம் நஷ்டத்தில் இயங்கி வருகிறது. இதற்கு மின் திருட்டு முக்கிய காரணமாக கூறப்படுகிறது. எனவே மின்நிறுவனத்தினர் மின்திருட்டில் ஈடுபடுபவர்களை பிடித்து கடும் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

இதில் மின்திருட்டில் ஈடுபடுபவர்கள் மீது கிரிமினல் வழக்குப்பதிவு செய்யப்படுகிறது. மேலும் அவர்களிடம் இருந்து அபராதம் வசூலிக்கப்படுகிறது.

குறிப்பாக தானேயில் உள்ள மும்ரா மற்றும் ஷில் பகுதியில் அதிகளவு மின்திருட்டு நடந்து வருகிறது. எனவே அதிகாரிகள் இங்கு அடிக்கடி அதிரடி சோதனையில் ஈடுபடுகின்றனர்.

இதுகுறித்து மாநில மின்நிறுவன அதிகாரி ஒருவர் கூறும்போது, “ மும்ரா, ஷில் பகுதியில் கடந்த 8 மாதத்தில் நடந்த சோதனையின் போது மின்திருட்டில் ஈடுபட்ட 1,364 பேர் பிடிபட்டனர். இவர்களிடம் இருந்து ரூ.1 கோடியே 95 லட்சம் அபராதம் வசூல் செய்யப்பட்டுள்ளது” என்றார்.

Next Story