அரியலூர் மாவட்டத்தில் குருத்தோலை ஞாயிறையொட்டி கிறிஸ்தவர்கள் ஊர்வலம்


அரியலூர் மாவட்டத்தில் குருத்தோலை ஞாயிறையொட்டி கிறிஸ்தவர்கள் ஊர்வலம்
x
தினத்தந்தி 26 March 2018 4:00 AM IST (Updated: 26 March 2018 1:37 AM IST)
t-max-icont-min-icon

அரியலூர் மாவட்டத்தில் குருத்தோலை ஞாயிறையொட்டி கிறிஸ்தவர்கள் குருத்தோலையை கையில் ஏந்தியவாறு ஊர்வலமாக சென்றனர்.

வரதராஜன்பேட்டை,

இயேசு கிறிஸ்துவை யூதர்களின் ராஜாவாக அறிவித்து, ஜெருசலேம் நகருக்குள் அவர் வந்ததை வரவேற்கும் வகையில் குருத்தோலைகளுடன் ஊர்வலமாக அழைத்துச்சென்ற தினத்தை, குருத்தோலை ஞாயிறாக கிறிஸ்தவர்கள் கொண்டாடி வருகின்றனர். அதன்படி அரியலூர் மாவட்டம், வரதராஜன்பேட்டை புனித அலங்கார அன்னை மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் பங்குதந்தை வின்சென்ட்ரோச்மாணிக்கம் குருத்தோலைகளை புனிதப்படுத்தி ஊர்வலத்தை தொடங்கி வைத்தார்.

குருத்தோலை ஊர்வலத்தின் போது ”தாவீதின் மகனுக்கு ஓசன்னா” என்பன உள்ளிட்ட கிறிஸ்தவ பாடல்களை பாடி ஏசுவின் பாடுகளை கிறிஸ்தவர்கள் நினைவுக் கூர்ந்தனர். தொடர்ந்து முக்கிய வீதிகளில் கிறிஸ்தவர்கள் குருத்தோலையை கையில் ஏந்தியவாறு ஓசன்னா கீதத்தை முழங்கியபடி முக்கிய வீதிகளில் ஊர்வலமாக சென்றனர்.

தொடர்ந்து புனித அலங்கார அன்னை ஆலயத்தில் குருத்தோலை ஞாயிறையொட்டி பங்கு தந்தை வின்சென்ட்ரோச் மாணிக்கம் தலைமையில் கூட்டு திருப்பலி நடைபெற்றது. பின்னர் புனிதப்படுத்தப்பட்ட குருத்தோலையை கிறிஸ்தவர்கள் தங்களது வீடுகளுக்கு எடுத்து சென்றனர். குருத்தோலை ஊர்வலத்தில் திரளான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர். இதேபோல் தென்னூர் அன்னை லூர்து ஆலயம், ஆண்டிமடம் புனித மார்ட்டினார் ஆலயம், கூவத்தூர் புனித அந்தோணியார் ஆலயம், உள்ளிட்ட கிறிஸ்தவ ஆலயங்களில் குறுத்தோலை ஞாயிறு ஊர்வலம் நடைபெற்றது. சிலுவைப்பாடுகளை சுமந்து உயிர்நீத்த தினத்தை கிறிஸ்தவர்கள் புனித வெள்ளியாக அனுசரித்து, இயேசு கிறிஸ்து 3-ம் நாள் உயிர்த்தெழுந்ததை ஈஸ்டர் பண்டிகையாக கொண்டாடியும் வருகின்றனர். இதையொட்டி, கிறிஸ்தவர்கள் சாம்பல் புதன் அன்று தொடங்கி 40 நாள்கள் விரதமிருந்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதேபோல் அரியலூரில் கிறிஸ்தவர்கள் குருத்தோலை தினத்தை கொண்டாடினர். அதன்படி பங்கு தந்தை ஆண்டணி ராஜ் தலைமையில் ஏராளமான ஆண்களும், பெண்களும், சிறுவர்-சிறுமிகளும் குருத்தோலைகளை கைகளில் ஏந்தியபடி அரியலூர் பஸ் நிலையத்திலிருந்து தேரடி சத்திரம் என நகரின் முக்கிய வீதிகள் வழியாக ஓசன்னா பாடல் களை பாடிய படி ஊர்வலமாக சென்றனர். பின்னர் ஆலயத்தில் திருப்பலி நடைப்பெற்றது.

திருமானூர் அருகே உள்ள ஏலாக்குறிச்சி அடைக்கல அன்னை ஆலயத்தில் குருத்தோலை ஞாயிறு திருப்பலி நடைபெற்றது. நிகழ்ச்சியில் தவக்காலத்தின் இறுதி ஞாயிற்றுக்கிழமை ஆண்டவர் ஏசுவின் திருப்பாடுகளின் குருத்து ஞாயிறு எனப்படுகிறது. இந்த குருத்து ஓலை ஞாயிறை முன்னிட்டு ஏலாக்குறிச்சி கடைவீதியில் பங்குதந்தை சுவக்கின், உதவி பங்குதந்தை திமோத்தி, திருத்தொண்டர் லூக்காஸ் மற்றும் அடைக்கல அன்னையின் பங்கு மக்கள் முன்னிலையில் குருத்தோலை மந்திரிக்கப்பட்டு, பக்தர்கள் குருத்தோலையை கையில் ஏந்தி ஆலயத்துக்கு ஊர்வலமாக சென்றனர். தொடர்ந்து, பங்கு தந்தை சுவக்கின் தலைமையில், உதவிபங்கு தந்தை திமோத்தி முன்னிலையில் குருத்தோலை ஞாயிறு திருப்பலி நடைபெற்றது. இந்த குருத்தோலை ஞாயிறு திருப்பலியில் திரளான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.

இதேபோல் திருமானூர் புனித அருளானந்தர் ஆலயத்தில் பங்கு தந்தை பெல்லார்மின் தலைமையிலும், புதுக்கோட்டை தூய மங்கள மாதா, குலமாணிக்கம் புனித இஞ்ஞாசியர், கோக்குடி புனித இஞ்ஞாசியர் ஆலயத்திலும் குருத்தோலை ஊர்வலம் சென்றனர். 

Next Story