திருவாரூர் புனித பாத்திமா அன்னை ஆலயத்தில் குருத்தோலை ஞாயிறு பவனி விழா


திருவாரூர் புனித பாத்திமா அன்னை ஆலயத்தில் குருத்தோலை ஞாயிறு பவனி விழா
x
தினத்தந்தி 26 March 2018 4:00 AM IST (Updated: 26 March 2018 1:37 AM IST)
t-max-icont-min-icon

திருவாரூரில் உள்ள புனித பாத்திமா அன்னை ஆலயத்தில் குருத்தோலை ஞாயிறு பவனி விழா நடந்தது.

திருவாரூர்,

ஈஸ்டர் பண்டிகைக்கு முந்தைய ஞாயிற்றுக்கிழமையை குருத்தோலை ஞாயிறாக கிறிஸ்தவர்கள் கடைப்பிடித்து வருகிறார்கள். குருத்தோலை ஞாயிறையொட்டி நேற்று திருவாரூரில் உள்ள புனித பாத்திமா அன்னை ஆலயத்தில் குருத்தோலை ஞாயிறு பவனி விழா நடந்தது. விழாவில் திருவாரூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர். இதில் குருத்தோலை பவனி நடைபெற்றது.

திருவாரூர் கீழவீதியில் இருந்து குருத்தோலை பவனி புறப்பட்டது. ஆலயத்தில் முடிவடைந்தது. இதைத்தொடர்ந்து ஆலயத்தில் பங்கு தந்தை சுந்தர்ராஜ் தலைமையில் சிறப்பு பிரார்த்தனை நிகழ்ச்சி நடந்தது. இதில் அருட்தந்தை இருதயராஜ், திருச்சி செயின்ஜோசப் கல்லூரி துணை முதல்வர் பிரிட்டோ, ஒருங்கிணைப்பாளர் ஜார்ஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர். இதேபோல திருவாரூரில் உள்ள பல்வேறு கிறிஸ்தவ ஆலயங்களில் குருத்தோலை ஞாயிறு அனுசரிக்கப்பட்டது.

சூசையப்பர் தேவாலயம்

மன்னார்குடி அருகே கர்த்தநாதபுரத்தில் உள்ள பழமையான புனித சூசையப்பர் தேவாலயத்தில் குருத்தோலை ஞாயிறையொட்டி சிறப்பு பிரார்த்தனை நிகழ்ச்சி நடந்தது. இதைத்தொடர்ந்து குருத்தோலை பவனி நடைபெற்றது. இந்த பவனியில் 400-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர். 

Next Story