கிறிஸ்தவ ஆலயங்களில் குருத்தோலை பவனி
குமரி மாவட்ட கிறிஸ்தவ ஆலயங்களில் நேற்று குருத்தோலை பவனி நடைபெற்றது.
நாகர்கோவில்,
கிறிஸ்தவர்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்று ஈஸ்டர் பண்டிகை. உயிர்ப்பு பெருவிழா என்று அழைக்கப்படும் இந்த பண்டிகையை கிறிஸ்தவர்கள் கொண்டாடுவார்கள். இந்த ஆண்டு ஈஸ்டர் பண்டிகை அடுத்த மாதம் (ஏப்ரல்) 1-ந் தேதி கொண்டாடப்படுகிறது.
ஒவ்வொரு ஆண்டும் ஈஸ்டர் பண்டிகைக்கு முந்தைய ஞாயிற்றுக்கிழமை அன்று குருத்தோலை பவனி நடைபெறுவது வழக்கம். இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்படுவதற்கு முன்பு மக்கள் அவரை அரசராக பாவித்து கோவேறு கழுதையில் அமர வைத்து ஊர்வலமாக அழைத்து செல்வார்கள். அந்த நிகழ்ச்சியை நினைவு கூரும் வகையில் கிறிஸ்தவர்கள் நேற்று உலகம் முழுவதும் குருத்தோலை திருநாளாக கொண்டாடினார்கள்.
குமரி மாவட்டத்தில் நேற்று அனைத்து கத்தோலிக்க மற்றும் சி.எஸ்.ஐ. ஆலயங்களிலும் குருத்தோலை பவனி நடந்தது.
இயேசு கிறிஸ்துவை ஊர்வலமாக அழைத்துச் சென்றபோது மக்கள், ஒலிவ மர கிளைகள் மற்றும் இலைகளை ஏந்தி ‘ஓசன்னா...’ என்ற பாடலை பாடியபடி சென்றனர். அதைப்போலவே நேற்று குமரி மாவட்ட ஆலயங்களில் மக்கள் குருத்தோலைகளை ஏந்தி ஓசன்னா பாடல் பாடிச் சென்றனர். மேலும் ஆலயங்களிலும் திருப்பலி மற்றும் சிறப்பு வழிபாடு நடந்தது.
நாகர்கோவில் கோட்டார் புனித சவேரியார் பேராலயத்தில் குருத்தோலை பவனி மறைமாவட்ட ஆயர் நசரேன் சூசை தலைமையில் நடந்தது. இதில் பங்கு மக்கள் உள்பட திரளானோர் கலந்து கொண்டனர். இதுபோல கற்கோவிலிலும் குருத்தோலை சிறப்பு ஆராதனை மற்றும் பவனி நடந்தது.
மேலும் பிற ஆலயங்களிலும் குருத்தோலை பவனி நடைபெற்றது. பவனியில் பல சிறுமிகள் தூய வெண்மை சீருடைகள் அணிந்து வந்தனர். பாடல்கள் பாடி அவர்கள் தலையாட்டிச் சென்றதை பொதுமக்கள் சாலையோரம் கூடி நின்று பார்த்தனர்.
குழித்துறை மறைமாவட்ட தலைமை பேராலயமான திருத்துவபுரம் மூவொரு இறைவன் பேராலயத்தில் குருத்தோலை பவனி, சிறப்பு திருப்பலி நடந்தது. இதில் மறைமாவட்ட ஆயர் ஜெரோம்தாஸ் தலைமை தாங்கினார். திருத்துவபுரம் பேராலய பங்குத்தந்தை ஷெல்லி ரோஸ், ஆயரின் செயலாளர் எட்வின் ராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பவனியானது திரித்துவபுரம் புனித ஜோசப் மேல்நிலைப்பள்ளி வளாகத்திலிருந்து தொடங்கி ஆலயத்தை சென்றடைந்தது. தொடர்ந்து அங்கு திருப்பலி நடைபெற்றது. இதில் ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.
மார்த்தாண்டம் மறைமாவட்ட தலைமை பேராலயமான கிறிஸ்துராஜபுரம் கிறிஸ்து அரசர் பேராலயம் சார்பில் நடைபெற்ற குருத்தோலை பவனி மற்றும் சிறப்பு திருப்பலிக்கு மறைமாவட்ட ஆயர் வின்சென்ட் மார் பவுலோஸ் தலைமை தாங்கினார். பங்குத்தந்தை ஜோஸ் பிரைட் முன்னிலை வகித்தார். பவனியானது டி.எம். கான்வென்ட் சிற்றாலயத்தில் இருந்து தொடங்கி கிறிஸ்துராஜபுரம் கிறிஸ்து அரசர் ஆலயத்தை சென்றடைந்தது. இதில் ஏராளமான அருட்கன்னியர்கள், இறைமக்கள் கலந்து கொண்டனர்.
மஞ்சாடி புனித சூசையப்பர் ஆலயத்தில் நடைபெற்ற குருத்தோலை பவனி மற்றும் திருப்பலிக்கு பங்குத்தந்தை ஜேசுரெத்தினம் தலைமை தாங்கினர்.
நட்டாலம் தேவசகாயம் பிள்ளை திருத்தலத்தில் அதிபர் ரசல்ராஜ் தலைமையில் குருத்தோலை பவனி, சிறப்பு திருப்பலி நடந்தது. காஞ்சிரகோட்டில் பங்குத்தந்தை அருளப்பன் தலைமையிலும், பாலவிளை புனித அந்தோணியார் ஆலயத்தில் திருத்துவபுரம் மறைவட்ட முதன்மை அருட்பணியாளர் புஷ்பராஜ் தலைமையிலும், பள்ளியாடி ஏசுவின் திரு இருதய ஆலயத்தில் பங்குத்தந்தை அனலின் தலைமையிலும், வெட்டுமணி புனித அந்தோணியார் திருத்தலத்தில் அதிபர் அருள் தேவதாசன் தலைமையிலும், மார்த்தாண்டம் புனித சவேரியார் ஆலயத்தில் பங்குத்தந்தை கிளட்டஸ் தலைமையிலும், திக்குறிச்சி ஆலயத்தில் பங்குத்தந்தை பால் ரிச்சர்ட் தலைமையிலும், மேல்புறம் ஆலயத்தில் பங்குத்தந்தை பிரைட் சிம்சராஜ் தலைமையிலும் குருத்தோலை பவனி, திருப்பலி நடைபெற்றன.
விரிகோடு பகுதியில் ஐக்கிய கிறிஸ்தவ குருத்தோலை பவனி நடந்தது. இதில் விரிகோடு இதயபுரம் ஆலயம், விரிகோடு சி.எஸ்.ஐ. ஆலயம், மற்றும் வாணியன் விளை, காரவிளை, ஞானபெத்தேல், நெல்வேலி போன்ற பகுதிகளை சேர்ந்த ஆலய பங்கு மக்கள் கலந்து கொண்டனர்.
மேலும் மார்த்தாண்டம் சி.எஸ்.ஐ., மார்த்தாண்டம் ரட்சணிய சேனை உள்பட அனைத்து ஆலயங்களிலும் நேற்று குருத்தோலை திருவிழா பவனி, சிறப்பு திருப்பலி, ஆராதனை நடைபெற்றது.
குமாரபுரம் அருகே கொற்றிக்கோட்டில் 6 சபைகள் கலந்து கொண்ட ஐக்கிய குருத்தோலை பவனி நடந்தது. இந்த பவனியானது கொற்றிகோடு மீட் நினைவு சி.எஸ்.ஐ. சேகர ஆலயத்தில் இருந்து தொடங்கி குமாரபுரம், முட்டைக்காடு, வலியவிளை, ஆசீர்வாதம் நகர் வழியாக கொற்றிகோட்டில் நிறைவு அடைந்தது.
நிகழ்ச்சியில், கொற்றிகோடு சி.எஸ்.ஐ. சபை போதகர்கள், கிறிஸ்டோபர் செல்வின், போவாஸ், புனித மிக்கேல் அதிதூதர் ஆலய பங்குதந்தை ஜேம்ஸ், சோலாப்புறம் புனித பத்தாம்பத்திநாதர் ஆலய பங்குதந்தை வின்சென்ட், பட்டன்விளை மகாராசன் வேதமாணிக்கம் நினைவு சி.எஸ்.ஐ. ஆலய போதகர் சுந்தர்ராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
குளச்சல் புனித அந்தோணியார் ஆலயத்தில் இருந்து குருத்தோலை பவனி புறப்பட்டு புனித காணிக்கை மாதா ஆலயத்தை சென்றடைந்தது. இதில் பங்குதந்தை எட்வின் தலைமையில் ஏராளமான பங்கு மக்கள் கலந்து கொண்டனர்.
முன்சிறை புனித ஆரோக்கிய அன்னை ஆலயத்தில் பங்குதந்தை பெஞ்சமின் தலைமையில் குருத்தோலை பவனி நடந்தது.
குருத்தோலை ஞாயிற்றுக்கிழமையை தொடர்ந்து வருகிற வியாழக்கிழமை பெரிய வியாழனாக கடைப்பிடிக்கப்படுகிறது. அன்றைய தினம் கிறிஸ்தவ ஆலயங்களில் பக்தர்களின் பாதம் கழுவும் நிகழ்ச்சி நடைபெறும். அடுத்த நாள் வெள்ளிக்கிழமை புனித வெள்ளியாகும். இயேசு சிலுவையில் அறையப்பட்டதை நினைவு கூரும் வகையில் அன்றைய தினம் ஆலயங்களில் சிறப்பு பிரார்த்தனை நடைபெறும்.

Related Tags :
Next Story