கோவையில் ரஜினி மக்கள் மன்றத்துக்கு புதிய நிர்வாகிகளை நியமிக்க எதிர்ப்பு, உழைத்தவர்களுக்கு பதவி இல்லை என்று புகார்


கோவையில் ரஜினி மக்கள் மன்றத்துக்கு புதிய நிர்வாகிகளை நியமிக்க எதிர்ப்பு, உழைத்தவர்களுக்கு பதவி இல்லை என்று புகார்
x
தினத்தந்தி 26 March 2018 4:30 AM IST (Updated: 26 March 2018 2:27 AM IST)
t-max-icont-min-icon

கோவையில் ரஜினி மக்கள் மன்றத்துக்கு புதிய நிர்வாகிகளை நியமிக்க எதிர்ப்பு கிளம்பியது. மேலும் உழைத்தவர்களுக்கு பதவி இல்லை என்று புகார் தெரிவித்தனர்.

கோவை,

ரஜினி மக்கள் மன்றத்துக்கு புதிய நிர்வாகிகள், தமிழ்நாடு முழுவதும் நியமிக்கப்பட்டு வருகிறார்கள். கோவை மாவட்டத்தில் புதிய நிர்வாகிகளை நியமிப்ப தற்கான ஆலோசனை கூட்டம் கோவை ராம்நகரில் உள்ள ஒரு ஓட்டலில் நடைபெற்றது. இதில் மாநில நிர்வாகி சுதாகர், மாநில செயலாளர் ராஜூமகாலிங்கம் ஆகியோர் தலைமை தாங்கினார்கள்.

இதில், கோவை, பொள்ள ாச்சி, மேட்டுப்பாளையம், காரமடை, கிணத்துக்கடவு, ஒத்தக்கால் மண்டபம் உள்ளிட்ட பல்வேறு பகுதி களை சேர்ந்த ரஜினி மக்கள் மன்றத்தினர் திரளாக கலந்துகொண்டனர். இந்த கூட்டத்தில் மாவட்ட, நகர, ஒன்றிய, பகுதி நிர்வாகிகளை தேர்வு செய்வது குறித்து ஆலோசிக்கப்பட்டது.

அப்போது ரஜினி மக்கள் மன்ற புதிய நிர்வாகிகளை நியமிக்க சிலர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் கூச்சல், குழப்பம் ஏற்பட்டது. அப்போது, புதியநிர் வாகிகளை நியமிப்பதில் ஒருதலை பட்சமான முடிவு எடுக்கப்படுவதாகவும், கோவையில் குறிப்பிட்ட 2 பேர் கொடுத்த பட்டியலின் அடிப்படை யில் நிர் வாகிகள் நியமிக்கப் படுவதாகவும், மன்றத்துக் காக ஏற்கனவே பாடுபட்டவர்களின் பெயர்கள் இடம் பெறவில்லை என்றும் கூறி வாக்குவாதம் செய்தனர்.

இதனால் புதிய நிர்வாகிகளை நியமிப்பதில் ஒருமித்த முடிவு ஏற்ப டவில்லை. இதைத்தொடர்ந்து கோவை மாவட்டத்துக்காக தேர்வு செய்யப்பட்டுள்ள புதிய நிர்வாகிகள் பட்டியல் சென்னையில் இருந்து வெளியிடப்படும் என்று கூறிவிட்டு நிர்வாகிகள் சென்றனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இதையடுத்து ரஜினி மக்கள் மன்றத்தில் பொறுப்புக்காக விண்ணப்பித்து இருந்த பலர், ரஜினிகாந்துக்கு புகார் மனு அனுப்பி உள்ளனர். அதில் அவர்கள் கூறியிருப்ப தாவது:-

கடந்த 25 வருடத்திற்கும் மேலாக ரசிகர் மன்றத்தில் இருந்து பணிகளை செய்து வருகிறோம். கடந்த டிசம்பர் மாதம் தாங்கள் அரசியலுக்கு வருவது குறித்து அறிவிப்பு வந்த நாள் முதல் தொடர்ந்து ஒரு முழு கட்சி தொண்டனாகவே மாறி வேலை செய்து வருகிறோம். பதவிக்காக இல்லை. உங்கள் மீது வைத்த அன்புக்காக.

கோவை மாவட்டத்தில் நிர்வாகிகள் சந்திப்பு கூட்டம் நடத்தப்பட்டு நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட் டனர். இதில் பல பேருக்கு அதிருப்தி. சிலருக்கு சந்தோஷம். இதில் பதவி சண்டை வேறு. இது அத்த னையும் மாநில நிர்வாகி சுதாகர் கண்முன்னே நடைபெற்றது. காவல்துறை வந்து சமாதானப்படுத்தும் அளவுக்கு பதவி சண்டை எதற்காக?. உண்மையாக உழைத்தவர்களுக்கு பதவி இல்லை பணம் வைத்து இருப்பவர்கள், மாற்று கட்சி யினர் தேர்வு செய்யப் பட்டுள்ளனர். ஒரு சிறிய அறையில் கூட்டம் நடத்தி வேண்டப் பட்டவர்களை மட்டும் நிர்வாகிகளாக தேர்தெடுக்க ப்பட்டுள்ளனர். இந்த விஷயத்தில் தலைவர் கவனம் செலுத்த வேண்டும்.

இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளனர்.

Next Story