அடிப்படை வசதிகள் இல்லாத பனங்குடி ரெயில் நிலையம், பயணிகள் அவதி
கல்லலை அடுத்த பனங்குடி ரெயில் நிலையத்தில் குடிநீர், கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லாததால் பயணிகள் அவதியடைந்து வருகின்றனர்.
கல்லல்,
கல்லலை அடுத்த பனங்குடியில் ரெயில் நிலையம் உள்ளது. இந்த ரெயில் நிலையத்தில் திருச்சி-ராமேசுவரம், திருச்சி-விருதுநகர், மன்னார்குடி-மானாமதுரை உள்ளிட்ட பாசஞ்சர் ரெயில்கள் நின்று செல்கின்றன.
இதனால் தினந்தோறும் இந்த ரெயில் நிலையத்தில் இருந்து சிவகங்கை, காரைக்குடி, புதுக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கல்லூரிகளுக்கு ஏராளமான மாணவ-மாணவிகள் சென்று வருகின்றனர்.
இதுதவிர வியாபாரம், தொழில் நிமித்தமாக சென்னை, காஞ்சீபுரம் உள்ளிட்ட நகரங்களுக்கு செல்லவும் ஏராளமான வியாபாரிகள், தொழிலாளர்கள் இந்த ரெயில் நிலையத்தை அதிக அளவில் பயன்படுத்தி வருகின்றனர்.
ஆனால் இந்த ரெயில் நிலையத்தில் பயணிகள் அமருவதற்கு இருக்கைகள் கிடையாது. அங்கு இருக்கும் ஒன்றிரண்டு இருக்கைகளும் சேதமடைந்து உள்ளன. மேலும் நிலையத்தில் நிழற்குடை அமைக்கப்படவில்லை. வெயில் அடித்தாலும், மழை பெய்தாலும் பயணிகள் மரத்தடியில் தஞ்சம் புகும் நிலையே தொடர்கிறது.
ரெயில் நிலையத்தில் குடிநீர் வசதி என்பது அறவே கிடையாது என்று பயணிகள் தொடர்ந்து புகார் தெரிவித்து வருகின்றனர். இங்குள்ள கழிப்பறை எப்போதும் பூட்டப்பட்டே கிடக்கிறது.
இதனால் இங்கு வரும் பெண்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். நடராஜபுரம், பனங்குடி, சாத்தரசன்பட்டி, கண்டுபட்டி, பாகனேரி உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் வெளியூர் செல்ல பனங்குடி ரெயில் நிலையத்தையே நம்பியுள்ளனர். தற்போது பஸ் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ள நிலையில் இப்பகுதி மக்கள் ரெயில் பயணத்தை நாடியுள்ளனர்.
எனவே பனங்குடி ரெயில் நிலையத்தில் போதிய அடிப்படை வசதிகளை அமைத்து தர தென்னக ரெயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பயணிகள் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Related Tags :
Next Story