தமிழகத்தின் உரிமையை அ.தி.மு.க. அரசு எந்த சூழ்நிலையிலும் விட்டுக்கொடுக்காது, அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி பேட்டி


தமிழகத்தின் உரிமையை அ.தி.மு.க. அரசு எந்த சூழ்நிலையிலும் விட்டுக்கொடுக்காது, அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி பேட்டி
x
தினத்தந்தி 25 March 2018 11:00 PM GMT (Updated: 25 March 2018 9:43 PM GMT)

தமிழகத்தின் உரிமையை அ.தி.மு.க. அரசு எந்த சூழ்நிலையிலும் விட்டுக்கொடுக்காது என்று அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி தெரிவித்தார்

சிவகாசி,

சிவகாசியில் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி கூறியதாவது:-

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க இன்னும் 4 நாட்கள் உள்ளது. அரை மணி நேரத்திற்குள் அரசியல் மாற்றம் நடைபெற்று வரும் வேளையில் இந்த அவகாசத்தில் எவ்வளவோ சாதிக்கலாம். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்று மத்திய அரசை முதல்-அமைச்சரும் துணை முதல்-அமைச்சரும் தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வருகின்றனர். பாராளுமன்றம் தொடர்ந்து முடக்கப்பட்டு வருகிறது. தமிழகத்தின் உரிமையை அ.தி.மு.க. அரசு எந்த சூழ்நிலையிலும் விட்டுக்கொடுக்காது. சிவகாசி மாநகராட்சியாக ஆக்கப்படும் என்று தமிழக முதல்-அமைச்சர்அறிவித்துள்ளார். தொடர்ந்து அது சம்பந்தமாக உள் கட்டமைப்பு பணிகள் நடைபெற்று வருகின்றது.

கூட்டுறவு சங்க தேர்தல் ஆரம்பிக்காத நிலையில் ஜனநாயக படுகொலை என்று சொல்வது கேலிக்கூத்தாக உள்ளது. தேர்தலில் போட்டியிடாமல் சிலர் இது போன்று சொல்வதை ஏற்றுக்கொள்ள முடியாது. கூட்டுறவு சங்க தேர்தல் ஜனநாயக முறைப்படி நடைபெறும். அ.தி.மு.க. வேட்பாளர்கள் ஜனநாயக முறைப்படி தேர்தலை சந்தித்து வெற்றிபெறுவார்கள்.

தமிழகத்தில் ஒரு நாளைக்கு 2 கோடி லிட்டர் பால் தேவைப்படுகிறது. அதற்கு தேவையான பால் நமக்கு கிடைக்கிறது. எந்த காலத்திலும் பால் தட்டுப்பாடு ஏற்படாது. இவ்வாறு அவர் கூறினார். 

Next Story