சட்டசபை இன்று நடப்பதையொட்டி காங்கிரஸ், என்.ஆர்.காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் ஆலோசனை


சட்டசபை இன்று நடப்பதையொட்டி காங்கிரஸ், என்.ஆர்.காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் ஆலோசனை
x
தினத்தந்தி 25 March 2018 11:30 PM GMT (Updated: 25 March 2018 11:08 PM GMT)

புதுவை சட்டசபை இன்று கூடுவதையொட்டி முதல்-அமைச்சர் நாராயணசாமி தலைமையில் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடைபெற்றது. இதேபோல் எதிர்க்கட்சி தலைவர் ரங்கசாமி தலைமையில் என்.ஆர்.காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏ.க்கள் ஆலோசனை நடத்தினர்.

புதுச்சேரி,

புதுச்சேரி சட்டசபை இன்று (திங்கட்கிழமை) கூடுகிறது. அதையொட்டி புதுவை சட்டசபை வளாகத்தில் முதல்-அமைச்சர் நாராயணசாமி தலைமையில் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

இதில் அமைச்சர்கள் நமச்சிவாயம், மல்லாடி கிருஷ்ணாராவ், கந்தசாமி, ஷாஜகான், கமலக்கண்ணன், துணை சபாநாயகர் சிவக்கொழுந்து, அரசு கொறடா அனந்தராமன் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் ஜெயமூர்த்தி, விஜயவேணி ஆகியோர் கலந்துகொண்டனர். இதில் சட்டசபையில் நிகழ்வுகளில் பங்கேற்பது தொடர்பாக ஆலோசித்தனர்.

இதேபோல் என்.ஆர்.காங்கிரஸ் கட்சியின் தலைவரும், சட்டசபை எதிர்க்கட்சி தலைவருமான ரங்கசாமி தலைமையில் அக்கட்சியின் எம்.எல்.ஏ.க்கள் ஆலோசனை கூட்டம் தனியார் ஓட்டலில் நேற்று இரவு நடைபெற்றது.

இதில் எம்.எல்.ஏ.க்கள் என்.எஸ்.ஜெ.ஜெயபால், சுகுமாறன், திருமுருகன், கோபிகா, சந்திரபிரியங்கா ஆகியோர் கலந்துகொண்டனர். இதில் சட்டசபை கூட்டத்தில் பங்கேற்பது குறித்து ஆலோசித்தனர். 

Next Story